Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About


கனடாவில் இருப்பவர்களுக்கு கார் அவசியம்.
அதிலும் முக்கியம் அதை ஓட்டத் தெரிவது.

அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் கார் ஓட்டியவர்கள் தவிர
மற்ற எல்லோரும், சர்வதேச ஓட்டுநர் லைசென்Š இருந்தாலும்கூட ,
முறைப்படி எழுத்துப் பரீட்சை, பிறகு கார் ஓட்டும் சோதனை என்று
சித்தியடைந்த பின்னர்தான் இங்கே ஓட்டுநர் உரிமம் பெறமுடியும்.

ஆகவே முதலில் எழுத்துப் பரீட்சைக்கு போனேன், இருநூறு பக்க
போக்குவரத்து விதிகளை கரைத்துக் குடித்த பிறகு. கேள்விகளைக்
கம்புயூட்டரே கேட்கும் என்பது நான் எதிர்பாராதது.

மாதிரிக்கு ஒரு கேள்வி:

எதிரில் STOP குறியீடு தென்பட்டால் என்ன செய்யவேண்டும்?

அ) திரும்பிப் போகவேண்டும்.
ஆ) திடீரென்று பிரேக் போடவேண்டும்.
இ) நின்று, கவனித்து, அபாயம் தவிர்த்து போகவேண்டும்.
ஈ) வேகமாகக் கடக்கவேண்டும்.

கோயிலிலே பூக்கட்டி வைத்து ஒன்றைத் தொடுவதுபோல நானும்
ஒன்றைத் தொடவேண்டும். இப்படியே தொட்டுத் தொட்டு இந்த பரீட்சை
யில் பாஸாகிவிட்டேன்.

பிறகு கார் ஓட்டும் பயிற்சிக்கு ஒரு குருவை தேடினேன். பயிற்சி
நிலையத்தில் இருந்து ஒருவரை அனுப்பி வைத்தார்கள். இளைஞர். வயது
30 இருக்கலாம். பெயர் கதிர்காமத்தம்பி கதிரைவேற்பிள்ளை என்றார்.
மொழியகராதி படைத்த கதிரைவேற்பிள்ளைக்கும் தனக்கும் ஒருவித
சம்பந்தமும் இல்லை என்று எவ்வளவு துருவியும் மறுத்துவிட்டார்.

சுருக்கம் வேண்டி நான் அவரை ‘குருவே’ என்று விளித்தேன்.
அவரோ வயது கருதி என்னை ‘அண்ணை’ என்றே அழைத்தார்.

‘அண்ணை, இது கொழும்பு இல்லை இந்த நாட்டு டிரைவிங் வேற
மாதிரி. உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமோ? தெரியுமென்றால் படித்தது
முழுவதையும் மறவுங்கோ’ என்றார்.

‘குருவே, மறதி என்னோடு கூடப்பிறந்தது என்று அம்மா அடிக்கடி
சொல்லுவா. நான் நல்லாய் மறப்பன்’ என்று உத்திரவாதம் அளித்தேன்.
அப்படியே எங்கள் பயிற்சி ஆரம்பமானது.

முதலாம் நாள். நான் சீட் பெல்ட்டை இறுக்கக் கட்டி, Šஸ்டியரிங்
வளை யத்தை நசுக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்
பொழுதே உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. கார் ஒரு இஞ்ச்கூட
இன்னும் நகரவில்லை.

குரு சொன்னார், "நீங்கள் பயப்பிடாதையுங்கோ. நான் எல்லாம்
படிப்பிச்சுத் தருவன்.’
முதலாம் பாடம்.

‘உங்களுக்கு KGB தெரியுமோ? ரஸ்‰ய உளவுத்துறை?’

‘ஓ, நல்லாய்த் தெரியும்.’

‘K என்றால் Key, G என்றால் Gear, B என்றால் Brake இதை
ஞாபகத்தில் வைத்திருங்கோ. அதாவது சாவி போட்டு காரை இயக்கி,
கியரை போட்டு பிறகு பிரேக்கை இறக்கி, இந்த ஒழுங்கு முறை
மாறாமல் செய்யவேண்டும். இரண்டு, மூன்று முறை இந்தப் பயிற்சி
நடந்தது. பிறகு கார் எறும்பு வேகத்தில் ஊர்ந்தது.

சிவப்பு விளக்கு வந்தது. கார் பிரேக்கை அழுத்தி நிற்கவைத்தேன்.
நின்றது.

‘குருவே’ என்றேன்.
‘என்ன?’
‘இப்ப மூச்சை விடட்டா?’
‘ஐயோ! ஐயோ! மூச்சை விடுங்கோ. அதுவும் நான் சொல்ல
வேணுமே’ என்றார்.
முதலாம் பாடம் முடிந்தது.

அடுத்த நாளே குருவுக்கும் எனக்கும் இடையில் சிறு மனŠதாபம்
வந்துவிட்டது.

‘காரை எடுங்கோ’ என்றார். நான் பிரேக்கை தளர்த்தி, பெல்ட்டை
கட்டி, சாவியைப் போட்டு காரை கிளப்பினேன். குரு ‘ஐயோ’ என்று
தலையில் கையை வைத்து, ‘அண்ணை, என்ன செய்யிறியள்?’ என்றார்.

‘FBI. பிரேக்கை Free பண்ணி, Belt ஐ கட்டி, Ignition ஐ Šடார்ட்
பண்ணினன்.’

‘நீங்கள் விளையாடுறியள். நான் KGB என்றல்லோ சொன்ன
னான்.’

‘அட , ஓ! FBI அமெரிக்க உளவுத்துறை. இன்னும் ஒருபடி மேலே
என்றதால் அப்படி செய்துபோட்டன். இனிமேல் கவனமாயிருப்பன்.’

குரு சிரிக்கவில்லை.

என் குருவிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவர் முன்கோபக்காரர்.
கோபம் வந்தால் அதை அடக்கத் தெரியாது. சத்தம்போட்டு ஏசத்
தொடங்கிவிடுவார். இதைத் தடுக்கும் தந்திரமாக காரிலே இருக்கும் சிகரட்
லைட்டரை உள்ளே தள்ளிவிடுவார். அது சூடாகி, சினந்து துள்ளி
வெளியே வரும்வரை வாய் திறக்கமாட்டார். அந்தக் காத்திருத்தலில்
அவர் கோபம் கொஞ்சம் தணிந்துவிடும்.

அன்றும் அப்படித்தான். சிகரட் லைட்டரை உள்ளே தள்ளிவிட்டார்.
அது சிவந்துகொண்டு வரும்போது அவரின் முகத்தின் சிவப்பும் குறைந்
தது.

தினம் தினம் குரு வந்தார். தினம் தினம் சிகரட் கொளுத்தியை
உள்ளே தள்ளினார். தினம் தினம் சிறு சண்டையும் வந்தது.

‘வலது பக்கம் திருப்பவேணும்’ என்றார் குரு.

சிவப்பு விளக்கு எரிந்தது. நான் காரை நிற்பாட்டினேன். பிறகு
மெதுவாக ஊர்ந்து பாதையில் ஒரு வாகனமும் ஆபத்தை தருவதற்கு
தயாராக இல்லை என்பதை நிச்சயித்துக்கொண்டு காரை எடுத்தேன்.

குரு ‘வெரிகுட்’ என்றார்.

அடுத்ததும் வலது பக்கம். குரு ‘வெரிகுட்’ என்றார்.

மீண்டும் வலது பக்கம். பச்சை விழுந்துவிட்டது. நான் காரை
நிறுத்தி, மெதுவாக இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ஊர்ந்தேன்.

‘அண்ணை, ஏன் காரை நிறுத்திறியள். உங்களுக்கு பச்சை
போட்டிருக்கிறான். எடுங்கோ, எடுங்கோ’ என்றார்.

‘குருவே, நான் பரீட்சைக்கு போகும்போது பச்சை விளக்குக்கும்
இப்படி கவனமாக எடுத்தால் இன்னும் அதிக மார்க்Š அல்லவோ
போடுவான்’ என்றேன்.

குருவின் முகம் கடுகடுத்தது. பாடம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

நாலு நாள் பாடம் எடுக்கவும் மறுத்துவிட்டார்.
மறுபடியும் தயாரிப்பு தொடங்கிய நாள் குருவின் முகத்தில் கல
வரம் மறைந்து, சாந்தம் வெளிப்பட்டிருந்தது. நான் ஒரு பட்சி செய்வது
போல வாயை திறந்தேன்.

‘குருவே, எனக்கு ஒரு ஐயம்?’
‘கேளுங்கோ, உங்களுக்கு உடம்பு முழுக்க ஐயம்தானே’ என்றார்.

‘பெரிய ட்ரக் வந்தால் அவைக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு பாதசாரி வந்தால் அவருக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு சைக்கிள் வந்தால் அவருக்கு முழு ரோட்டையும் கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு மோட்டார் சைக்கிளுக்கும் முழு ரோட்டும் கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு பŠ வந்தால் அவர் வளைத்து எடுத்துப்போக முன்னுரிமை
கொடுக்க வேண்டும்?’
‘ஓம்.’
‘அதுவும் பள்ளிக்கூட பŠ என்றால் அது நிற்கும்போதுகூட
பின்னால் 20 அடிதூரம் தள்ளித்தான் காரை நிறுத்தவேண்டும்?’
‘ஓம்.’
‘அம்புலன்Š, பொலீŠ, இன்னும் அவசர வாகனங்கள் வந்தால்
ஒதுங்கி கரையில் நிற்கவேண்டும்?'
‘ஓம்.’
‘அப்ப ஏன் மினக்கெட்டு நான் கார் பழகிறன்?’
‘அதுதான் எனக்கும் தெரியவில்லை. உங்களுக்காக 72 பŠ ரூட்கள்
இங்க வைத்திருக்கிறான்கள்.’

நான் சொண்டுகளை மடித்து வாயை மூடினேன்; புத்திசாலித்தனம்
ஒழுகாமல் பார்த்துக்கொண்டேன்.

என்னுடைய பரீட்சை தினம் நெருங்கியது. நான் இப்பொழுது
சிக்னல் விளக்குகளுக்கிடையில் மூச்சுவிடப் பழகிவிட்டேன். இடது
பக்கத் திருப்பம், வலது பக்கத் திருப்பம், வீதி மாறுவது எல்லாம் எனக்கு
தண்ணீர் பட்ட பாடு.

‘நிற்பதுவே, எடுப்பதுவே, ஓடுவதுவே.’ இதுவே என் சிந்தனை.
ஒரு சிறு ஒழுங்கை வழியாக குரு என்னை ஓட்டச்சொன்னார்.
STOP குறியீடு வந்தது. நிதானமாக நின்று குரு சொல்லித் தந்தபடி ‘ஒன்று,
இரண்டு, மூன்று’ என்று எண்ணி பிறகு காரை எடுத்தேன். அடுத்த
STOPல் பாதை ஓவென்று வெறுமையாக இருந்தது. ஒரு குருவியும்
இல்லை. ரோட்டை பார்க்க வாய் ஊறியது. அப்படியே நிற்காமல் எடுத்து
விட்டேன்.

‘என்ன அண்ணை, சோதனை வருகுது, நீங்கள் STOP சைனில்
நிற்காமல் இப்படி எடுக்கிறியள்?’ என்றார் எரிச்சலுடன்.

‘இல்லை, குருவே! ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லித்தான்
எடுத்தேன். கொஞ்சம் கெதியாய் எண்ணிப்போட்டன்.’

பரீட்சைக்கு இன்னும் ஒரேயொரு நாள்தான் இருந்தது. குருவுக்கு
என் சாரதியத்தில் நம்பிக்கை கிடையாது. எனக்கும்தான்.
அன்றுவரை சொல்லித் தந்த விதிகள் எல்லாவற்றையும் குரு
இன்னொரு முறை ஒத்திகை பார்த்தார்.

கார் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஓட்டு வளையத்தை
என்னுடைய கை இறுக்கிப் பிடித்தபடியிருந்தது.
குரு கத்தினார்.
‘ஒழுங்கையை மாத்துங்கோ, இடது பக்கம் திரும்ப
வேணும். இடது பக்கம்.’

‘எந்த இடது பக்கம்? எந்த இடது பக்கம்?’

‘வலது பக்கத்துக்கு எதிர் பக்கம்.’

ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது.
அன்று காருக்கு சிறிய காயந்தான்.
கடைசியில் சோதனை தினம் வந்தது. எனக்கு வாய்த்த பரீட்சைக்
காரர் ஒரு வெள்ளைக்காரர். என் பரீட்சைத் தாளை அட்டையில் செருகிக்
கொண்டு, தன் அங்கங்களை அநாவசியமாக தொந்திரவு படுத்தக்கூடாது
என்பதுபோல மெதுவாக நடந்துவந்தார். காரிலே ஏறியிருந்து கட்டளை
களை கொடுத்தார். அதே சமயம் அவருடைய கடைசி சாப்பாட்டின்
மிச்சங்களை நாக்கினால் துளாவி தேடினார்.

என் குருவுடன் போகும்போது செய்த அத்தனை தவறுகளையும்
அன்று செய்தேன். போதாததற்கு ஒரு புதுவிதமான பிழையையும் நானா
கவே கண்டுபிடித்து அதையும் குறைவின்றி செய்தேன்.

இடது பக்கம் திரும்புவதற்காக நாற்சந்தியில் நின்றேன். பச்சை
விழுந்து விட்டபடியால் முன்னுக்கு வந்து வசதியான தருணத்திற்காக
காத்திருந்தேன். மஞ்சள் வந்துவிட்டது. மூச்சை பிடித்து காரை எடுத்தேன்.
ஆண்டவனால் அனுப்பப்பட்டதுபோல அந்த நேரம் பார்த்து பாதசாரி
ஒருத்தர் சாவதானமாக ரோட்டை கடந்தார். அதி வேகத்தில் எதிராக ஒரு
காரும் வந்துகொண்டிருந்தது. தவிர்க்கமுடியாது. அம்புப் பாய்ச்சலுக்கு
சற்று குறைவான வேகத்தில் காரை விட்டேன். பாதசாரியின் பிருட் டத்தை
மெதுவாக இறகு தடவுவதுபோல உரசிக்கொண்டு கார் போனது.

பனிக்குளிர் காலங்களில் குளியலறைப் பக்கமே போய் பழக்கமில்லாத
அந்த வெள்ளையதிகாரி அப்போதுதான் குளித்தவர்போல தொப்பலாகி
விட்டார்.

எத்தனை தடவை என்னுடைய சோதனை முயற்சி தொடர்ந்தது
என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். கடைசியில், விறைக்
கும் ஒரு குளிர் கால முன்மதியத்தில், ரோட்டு ஓரங்களில் பனிச்சேறு
குவிந்திருக்கும் நல்ல நாளில், பாதசாரிகள் எல்லாம் விடுப்பில்
போய்விட்ட ஒரு சுப நேரத்தில், எனக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்தது.

அதற்கு பிறகு சில வி„யங்களை நானாகவே கற்றுக்கொண்டேன்.
மோல்களில் ஒரேயொரு ‘நிறுத்தும்’ இடத்தை கண்டு நான் அதை இலக்கு
வைத்து ஓட்டிப் போகும்போது யாரோ பதினாறு வயது தேவதை படு
வேகத்தில் வந்து பின்பக்கமாக காரை நுழைத்துவிடுகிறாள். மறுபடியும்
மோலை சுற்றவேண்டும். அப்படியான தருணங்களில் இப்போ
தெல்லாம் கண்மண் தெரியாமல் ஓட்டி இடத்தை பிடித்து விடுகிறேன்.

சில ‘நிறுத்தும்’ இடங்களில் பார்க்கிங் மீட்டர் இருக்கும். அதற்குள்
நாலு டொலர் போட்டால் நாலு மணி நேரம் நிற்பாட்டலாம். சில
வேளைகளில் மூன்று மணி நேரத்தில் வந்த வேலை முடிந்துவிடும். மீதி
ஒரு டொலரை மெசினிலிருந்து எப்படி மீட்பது என்று எனக்கு தெரிய
வில்லை. இதை குரு சொல்லித்தர மறந்துவிட்டார்.

நான் கார் ஓட்டுவதற்கு பத்து விரல்களையும் பாவிக்கிறேன்.
கனடாவில் ஒன்பது விரல்களில்தான் கார் ஓட்டவேண்டும். அப்படித்
தான் பலர் செய்கிறார்கள். வலது கையின் நடுவிரலை எதிரே வருபவர்
களையும், பின்னுக்கு இருந்து வந்து வேகமாக முன்னேறுபவர்களையும்,
குறுக்கே மறிப்பவர்களையும் வசை பாடுவதற்காக தனியே வைத்திருக்க
வேண்டும். என் குரு அதையும் படிப்பிக்கவில்லை.

ஆனால் ‘எல்லாம் படிப்பிச்சுத் தருவன்’ என்று உத்திரவாதம்
கொடுத்த குரு பெரிய பச்சை துரோகம் ஒன்றை எனக்கு செய்துவிட்டார்.

Šடியரிங் வளையத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரம் பின்னுக்கு
தள்ளப்பட்ட இருக்கையில் சாய்ந்து இருந்துகொண்டு, ரேடியோ முழங்க,
ஒரு கையால் செல் போனைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் நூறு
பாகை சூட்டில் நுரை பொங்கித் தள்ளும் ‘லாத்தே’ கோப்பியை கடுதாசி
குவளையில் உறிஞ்சியபடி, அதிவேக நெடுஞ்சாலையில் 120 கி.மீ
வேகத்தில் போகும் ரகŠயத்தை மட்டும் குரு எனக்கு சொல்லித் தரவே
இல்லை.
from : அ.முத்துலிங்கம் படைப்புகள்

3 Comments:

  1. வடுவூர் குமார் said...
    திரு.அ.முத்துலிங்கத்தின் படைப்புகளை இங்கு ஏற்றுவதற்கு உங்களுக்கு மிக்க நன்றி.
    அருமையாக இருக்கு.இங்கு
    உரிமம் எடுக்க அப்படி இப்படி என்று 4000 வெள்ளியாகிவிடும் என்பதால் தள்ளிப்போட்டு வருகிறேன்.
    இந்தியாவில் நீங்கள் வண்டி ஓட்டியிருந்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் ஓட்டலாம்.
    ஒன்பது விரலில் ஓட்டுவது என்பதெல்லாம் குரு சொல்லிக்கொடுப்பதில்லை...சக ஓட்டுனரிடம் இருந்து தெரிந்துகொள்ள வேண்டியது.
    cherankrish said...
    குமார்.. அந்தநாள்ள எங்கட ஊரில ஒரு சிகரட்பக்கட்டோட ஊருக்கே லைசென்ஸ் எடுக்லாம் தெரியுமா?
    Veera said...
    நன்றாக எழுதியுள்ளீர்கள்..

    //‘ஒழுங்கையை மாத்துங்கோ, இடது பக்கம் திரும்ப
    வேணும். இடது பக்கம்.’

    ‘எந்த இடது பக்கம்? எந்த இடது பக்கம்?’

    ‘வலது பக்கத்துக்கு எதிர் பக்கம்.’//

    ஹா..ஹா..ஹா.. ரசித்து சிரித்தேன்.. :-)

Post a Comment