Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About


லூயிŠ கரோல் என்பவர் ‘அலி…¢ன் அதிசயஉலகம்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதை நீங்கள் எல்லோரும்சிறு வயதில் படித் திருப்பீர்கள். அவர் எழுதிய வருடம் 1865. இப்பொழுது அவர் இருந்தால் அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கமாட்டார்.ஏனென்றால் ஒரு சுப்பர் மார்க்கட்டிற்குள் நுழைந்ததும் அவருக்கு அப்படிஓர் அதிசய உலகம் கிடைத்துவிடும்.


இந்த உலகத்தில் நான் என் முழு நாளையும் செலவழிக்க சம்மதிப்பேன். இது எனக்கு இரண்டாவது வீடு. எந்த நேரமும் எங்கள் வரவைஎதிர்பார்க்கும் சுப்பர் மார்க்கட்டுக்குள் சில பேர் வாரத்துக்கு ஒரு முறைமட்டுமே வருகிறார்கள் என்று படித்தேன். இதை நம்ப முடிகிறதா? நான்முதல் நாள் இங்கே வந்தபோது அதிசயித்த மாதிரியே இன்றும் அதிசயிக்கிறேன். நான் பிறக்கும்போதே இப்படிப் பிறந்தவனல்ல. அப்படிமாற்றப்பட்டவன். வேடர்கள் தானாக உருவாவதில்லை; மான்களேஅவர்களை உருவாக்குகின்றன, அல்லவா?


ஒரு தாய் தள்ளுவண்டியைத் தள்ளினாள். அவளுடைய மூன்றுவயதுக் குழந்தை ஒன்று வண்டியில் கால்களை மாட்டி தலைகீழாகத்தொங்கிக்கொண்டு சிரித்தது. அதன் கைகள் தரையைத் தொட்டன. தலைஒரு பந்துபோல கைகளுக்கு இடையில் தொங்கியது. சிறிது நேரத்தில்அதற்கு அலுப்புத் தட்டிவிட்டது. தள்ளுவண்டியில் தொங்கியபடிஒவ்வொரு சாமானாக தரையில் இழுத்துப் போட்டது. வண்டியைசிரத்தையாக தள்ளியபடி தாய் பேசாமல் வந்தாள். சுப்பர் மார்க்கட்காரர்களும் ஒன்றுமே சொல்லவில்லை. Free Country என்று சொல் வதன்ஒரு நுனி அன்று எனக்குப் புரிந்தது.


இன்னொரு தள்ளுவண்டியை வேகமாகத் தள்ளியபடி ஓர் இளம்பெண் சென்றாள். மிகப் பழசாகிப்போன திருமண ஆடையில், பாதிஒப்பனையில் எழும்பி நேராக வந்தவள்போல காட்சியளித்தாள். அவள்கையில் ஒரு லிŠட் இருந்தது. அந்தப் பட்டியலை சுப்பர் மார்க்கட் நடைவழி ஒழுங்கின்படி தயாரித்திருந்தாள் போலும். வேகமாகப் போகும்வழியிலேயே அவளுக்கு எந்த இடத்தில் எந்தப் பொருள் இருக்கிறதுஎன்பது தெரிந்தது. வலது கையால் வண்டியைத் தள்ளியபடியே, இடதுகையால் பூப்பறிப்பது போன்ற லாகவத்துடன் சாமான்களைப் பறித்துவண்டியை நிரப்பினாள். கடைசி நடைவழியைக் கடந்தபோது வண்டி யும்நிறைந்தது. லிŠடும் முடிந்தது. திறமையான பெண்.


எந்த சுப்பர் மார்க்கட்டிலும் சில வசதிகள் நிச்சயம் இருக்கும்.எட்டுக்கும் குறைந்த பொருள்கள் வாங்கினால் ஒரு வரிசை; 16 க்கும்குறையவென்றால் இன்னொரு வரிசை; நிறைந்தவர்களுக்கு வேறுவரிசை. வயது குறைந்தவர்களுக்கு ஒன்று. வாடிக்கையாளர்கள் வசதிகருதி இப்படி பல வரிசைகள் இருந்தாலும் நான் எச்சரிக்கையாகவேஇருப்பேன். உதாரணமாக ஒன்பது பால் பாக்கட்டுகள் வாங்கினால் நான்எந்த வரிசையில் நிற்பது. காசாளர் ஒருமுறைதானே மெசினில் பதிவுசெய்கிறார். இரண்டு றாத்தல் தக்காளி மட்டுமே வாங்கினேன், ஆனால்அதில் பத்து பழங்கள் இருக்கின்றன. இப்படியான குழப்பத்தில் எங்கேநிற்பது?‘வாடிக்கையாளர் சேவை’ என்று ஒரு பகுதி இருக்கிறது. உங்கள்கேள்விகளை எல்லாம் இங்கே சமர்ப்பிக்கலாம்.


எனக்கு முன் ஒருசீனாக்காரர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் கீழ்ப்படியும் குணம்தேவைக்கு அதிகமாக இருந்தது. அவர் முறை வந்ததும் மெல்லிய குரலில்தனக்கு நோய் கண்டிருப்பதாகவும், அதைக் குணப்படுத்த டின்னிலேஅடைத்து விற்கும் வெள்ளாட்டுக் கர்ப்பப்பை கிடைக்குமா என்றும்கேட்டார். அந்தப் பெண் அதற்குப் பதிலாக இன்னும் மெல்லிய குரலில்ஏதோ கூறினாள்.



எனக்குப் பின்னால் ஒரு ஆப்பிரிக்கர் நின்றுகொண்டிருந்தார். உடல்பாரத்தை இரண்டு கால்களுக்கும் சரி சமமாகப் பிரிக்காமல் மாறி மாறிநின்று அவŠதைப் பட்டார். இவர் காண்டாமிருகத்தின் கொம்புக்காகநிற்கலாம் என்று பட்டது.


என் முறை வந்தது. அந்தப் பெண் தன் இடது பக்க மார்பில்¦ƒனி·பர் என்று பெயர் எழுதி வைத்திருந்தாள். (வலது பக்கத்து பேர்எங்கள் ஊகத்துக்கு விடப்பட்டிருந்தது). கோடுகள் அடித்த தலை மயிர்.நீட்டிய சதுர நகங்கள். முற்றுப்புள்ளி இல்லாத வசனம்போல முடிவேயில்லாத கண்கள்.


‘என் மனைவி அபூர்வமான ஒரு புடிங் செய்கிறாள். அதற்கு சŠகற்சுவான் இந்தியர்கள் அறுவடை செய்த காட்டு அரிசி ஒரு பாக்கட்வேண்டும். அது இல்லாமல் வீட்டுக்குப் போகமுடியாது. உதவி செய்யமுடியுமா’ என்றேன். ‘வீட்டுக்குப் போக உதவ முடியாது. ஆனால் சுப்பர்மார்க்கட்டை விட்டு வெளியே போக உதவமுடியும்’ என்றாள். இப்பொழுது அவள் சிரிப்பு சிவப்பாக மாறிவிட்டது. நான் கேட்ட பொருள்இருக்கும் திசையைக் காற்றிலே வரைந்து காட்டினாள்.


தள்ளுவண்டியிலே சாமான்கள் நிறைந்த பிறகு எந்த வரிசையில்நிற்பது என்று பலர் குழம்புவது எனக்குத் தெரியும். இதற்கு சில சிம்பிள்விதிகள் இருக்கின்றன. எந்த வரிசை நீளம் குறைந்தது என்று பார்த்துநிற்கக்கூடாது. அது அனுபவக் குறைவைக் காட்டும். உங்களுக்குமுன்னால் நிற்பவர் வண்டிகளிலே என்ன இருக்கிறது. பக்கட்டுகளும்,டின் உணவு வகைகளும், போத்தல் சாமான்களும் என்றால் அதுவிரைவில் முடியக்கூடிய வண்டி . மாறாக பழங்களும், மரக்கறிகளுமாகஇருந்தால் அவை நிறுக்கப்பட்டு விலை பதியப்பட வேண்டும். நேரம்பிடிக்கும். காசாளரிடம் ஞாபகசக்தி பற்றாக்குறை இருப்பின் ஆபத்து.



இன்னொன்று. காசாளரை ஒருமுறை பார்க்கவும். சுறுசுறுப்பானஇளவயதுப் பெண்ணாக, கையிலே திறப்பு வளையம் மாட்டியபடி,தலை முடியிலே பேனாவைக் குத்திக்கொண்டு, ஒரு சிறு விலங்கின் துரிதமான பார்வையுடன் இருந்தால் அந்த வரிசை உத்தமமானது. அதையேதேர்வு செய்யவும். ஒவ்வொரு வண்டியையும் அவள் அதிவேகமாகத்தீர்த்து வைப்பாள்.




என் முறை வந்ததும் வியாபார முறுவலுடன் ‘இன்றைக்கு நாள்எப்படி?’ என்று கரிசனையாக வினவினாள்.


‘இதுவரைக்கும் நல்ல நாளே! பில் தொகையே மீதி நாளை தீர்மானிக்கும்’ என்றேன். அவள் இரண்டு வழுவழுவென்ற புƒங்களையும்ஒரு இன்ச் மேலே தூக்கி அசைத்தாள்.


நான் பொருள்களைத் தூக்கி ஓடும் பெல்ட்டிலே வைத்தேன்.பக்கட்டுகள் பட்டாள வீரர்கள்போல நின்ற நிலையிலே போயின; போத்தல்கள் உருண்டன, டின் உணவு வகைகள் துள்ளிக்கொண்டு நகர்ந்தன.அவளுடைய திறமையான விரல்கள் மெசினில் வேகமாக விளையாடத்தொடங்கின. லாகவமாக சாமான்களைத் தூக்கி மந்திரக் கோடுகளைக்காட்டியதும், மின் கண்கள் அவற்றை நொடியில் கிரகித்து விலைகளைப்பதிவு செய்தன. ஒவ்வொரு பொருளும் டிங் என்ற தாள கதியுடன் ஒலிஎழுப்பி மறுபக்கம் போய்ச் சேர்ந்தது. அந்த அசைவுகள் பேர் போனர‰ய நடனம் போல ஓர் ஒயிலுடன் நடந்தேறின.



தள்ளுவண்டியிலே சாமான்கள் முடியும் தறுவாயில் என் மனைவிஏதோ நினைத்துக்கொண்டு மறுபடியும் உள்ளே ஓடினாள். இது வழக்கமாக நடப்பதுதான். நேரம் நகர்ந்தது; வரிசை நகரவில்லை. என்பின்னால் நின்றவர்கள் ஒரு காலால் மற்றக் காலை உரசத் தொடங்கிவிட்டார்கள்.


இறுதியாக ஒலிம்பிக் §ƒ¡தியைப்போல உப்பு பக்கட்டை தூக்கியபடி ஓடி வந்தாள். டென்னிŠ போட்டியில் காணும் தலைகள்போலஎல்லாம் ஒரே சமயத்தில் திரும்பி என் மனைவியை நோக்கின.


சாமான்களை காரில் ஏற்றுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.சுப்பர் மார்க்கட்காரர்கள் தாங்களாகவே கொண்டுவந்து காரில் ஏற்றிவிடுவார்கள். மிகவும் வசதியான ஏற்பாடு. ஆனால் பொருள்கள் எல்லாம் வந்து சேர்ந்தனவா? யூனிகோ தக்காளி துண்டங்கள் மூன்று டின்கள்வாங்கினோமே, அவை எல்லாம் வந்தனவா என்று மனம் வீடு போய்ச்சேரும் வரைக்கும் அடித்துக்கொண்டிருக்கும். ஆனால் நாங்களாக ஏற்றுவதில் சில அனுகூலங்களும், ஆபத்துக்களும் உள்ளன. தள்ளுவண்டியைரோமாபுரி மன்னர்கள் போட்ட கல்லுப்பாதை போன்ற வீதியில் தள்ளிக்கொண்டு கார் தரிப்பிடத்துக்கு போக வேண்டும். உங்கள் கைகள் இன்னும்முறிந்து கீழே விழாமல் இருக்கும் பட்சத்தில், ‘சனிக்கிழமைரொறொன்ரோ Šடார்’ போல கனம் கனக்கும் சாமான்களை ஒவ்வொன்றாகத் தூக்கி காரிலே ஏற்ற வேண்டும். இதற்கு கெட்டியானஆயுளும், குறைவுபடாத உடல் பலமும் அவசியம்.


பொருள்கள் தெரிவு செய்யும்போது அவற்றின் கால வரம்புகளைப்பார்க்க வேண்டும். இவை சாமான்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுசட்டம். சிலதில் முடிவு தேதி ’30 ƒ¥ன் 2002' என்று துல்லியமாக எழுதியிருக்கும். அது எப்படி? ஒரு நாள் முன்பு கூட ஆரோக்கியமாக இருக்கும்உணவு ஓர் இரவு முடிவதற்கிடையில் பாவனைக்கு மீறியதாக மாறிவிடும். இன்னும் சில ’30 ƒ¥ன் 2002க்கு முன் உத்தமம்’ என்று எழுதியிருக்கும். அதாவது அதற்குப் பிறகும் பாவிக்கலாம். உங்கள் ரசனையையும், ஆரோக்கியத்தையும், பணபலத்தையும் பொறுத்தது. சில ’30ƒ¥ன் 2002க்கு முன் பாவிக்கவும்’ என்று திட்டவட்டமாக இடித்துச்சொல்லும். வைன் வாங்கும்போது மட்டும் முடிவு தேதி தேடவேண்டாம். அவற்றுக்கு முடிவு இல்லை. இன்னும் சொல்லப்போனால்நாள் போகப் போகத்தான் அவற்றின் சுவை விசே„ம் அதிகரிக்கும்என்று சொல்கிறார்கள்.


ஊனமுற்றவர்களுக்கு என்று சக்கர நாற்காலி படம் கீறி வைத்தவரிசை ஒன்று இருக்கிறது. இது மிகவும் வேகமான பாதை. இரண்டு நாள்சிறுநீர் கழிக்காததுபோல முழங்கால்கள் ஒட்ட, கால்களை வாத்துபோலவைத்துக்கொண்டு, இந்த வரிசையில் மாறுவேடமாகப் புகுந்து விரைவில் வெளி வந்துவிடலாம். ஆனால் இந்த தந்திரத்தை ஒரு நாளைக்குஇரண்டு தடவைக்கு மேலே செய்யக்கூடாது.


என்னிடம் இருக்கும் செல்போன் மணி அடிக்காது; அதிர்வுகொடுக்கும். நான் அதை என்னுடைய இடது கால் சட்டைப் பைக்குள்வைத்திருப்பேன். ஒன்றரைப் பக்க லிŠடில் உள்ள சாமான்களை ஒன்றுவிடாமல் ஏற்றிக்கொண்டு வந்து வாகனத்தை வீட்டு கார் பாதையில்திருப்பும்போது ஓர் அதிர்வு வந்தது. கேட்பதற்கு உபயோகிக்கும்அங்கங்களுக்கு வெகு தூரத்திலும், இன்னும் மிகவும் வேண்டிய ஒருஅங்கத்துக்கு அண்மையிலும் இந்த அதிர்வு ஏற்பட்டது. அந்த செல்போனை அப்போது தொடக்கூடாது. மனைவியிடம் இருந்துதான்அழைப்பு வந்திருக்கும். வேறு என்ன? கொழுப்பு நீக்கிய, கடைந்துகட்டப்பட்ட, லக்ரோŠ அகற்றிய 1% பால் பக்கட் ஒன்று வாங்கி வரச்சொல்வாள்.


இன்னும் ஒரு விதி இருக்கிறது. உங்கள் உடம்பில் இருந்து உயிர்பிரியும் ஆபத்து இருந்தாலும் ‘இரண்டு சாமான்கள் மட்டும் வாங்குவதற்காக’ ஒரு சுப்பர் மார்க்கட்டுக்குள் பிரவேசிக்கக்கூடாது. அவசரமாகஉள்ளே நுழைகிறீர்கள். உங்கள் கண்ணிலே முதலில் படுவது தோல் நீக்கியவெள்ளை உருண்டைக் கிழங்கு டின்கள். இரண்டு வாங்கினால் ஒருசுத்தியல் இலவசம். வாங்கிவிடுகிறீர்கள். அடுத்து உங்கள் கண்கள்அகலமாக விரிகின்றன. உப்புநீரில் மிதக்கவிட்ட சாம்பினோன் முழுக்காளான்கள், நாலு டின்களின் விலை ஒரு டொலர்தான். நம்பமுடிகிறதா?வாங்கிவிடுகிறீர்கள். அட , இதைப் பாருங்கள். கதவு கிறீச்சிடும் சத்தத்தைநிறுத்தும் எண்ணெய் டின். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். உங்கள்வீட்டில் ஒன்பது கதவுகள் காவல் செய்கின்றன. ஆனால் ஒரேயொருகதவு மட்டும் கிறீச்சிடுகிறது. மற்றவையும் சீக்கிரத்தில் கிறீச்சிடும் என்றநம்பிக்கை. வாங்கிவிடுகிறீர்கள். இனிமேல் இருபது வருடங்களுக்குஅந்தக் கவலை இல்லை. நீங்கள் பல காலமாகத் தேடிவரும் குளிர்காலத்து மூங்கில் குருத்து. அவற்றிலே இரண்டு வாங்கிவிடுகிறீர்கள்.இடதுகைக்காரர் பாவிக்கும் கத்தரிக்கோல். ஐம்பது வீதம் தள்ளுபடி. இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் வராது. வாங்கிவிடுகிறீர்கள். இடதுகைக்காரருக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கலாம். யாராவது அகப்படுவார்கள். வண்டி நிறைந்துவிடுகிறது.


வீடு வந்து சேர்ந்ததும் உங்கள் மனைவி முதலில் கேட்பது,‘துணிகள் மிருதுவாக்கும் சினகிள் பக்கட் எங்கே?’ என்றுதான்.அப்பொழுதுதான் உங்களுக்கு ஞாபகம் வருகிறது நீங்கள் சுப்பர் மார்க்கட்போனது அதை வாங்குவதற்குத்தான் என்று.இன்னொரு ரகŠயம். நீல்சன் சந்திப்பில் உள்ள சுப்பர் மார்க்கட்டில்காலை 10 - 12 மணிவரை இலவசமான சாம்பிள்கள் உண்பதற் காகத் தருவார்கள். உங்கள் வாங்கும் திறமையை ஊக்கப்படுத்துவதுதான் நோக்கம்.அன்று அறுபது நாட்கள் மூப்பாக்கிய உயர்ரக வெண்ணெய் கட்டிகள்கிடைத்தன. பல விதமான ருசிகளை பரீட்சித்துப் பார்க்கலாம்.


சுற்றுலா தொடர்ந்தது. தமிழ் நாட்டில் ஆற்றின் பெயர்கள்இடத்துக்கு இடம் மாறுவதுபோல இங்கே கனடாவிலும் மக்கோவன்ரோடு திடீரென்று தன் பெயரை டான்·போர்த் என்று மாற்றிக்கொண்டது. கென்னடி சந்திப்பில் இருக்கும் சுப்பர் மார்க்கட்டில் மேப்பிள்சிரப்பும், ரொட்டியும் கொடுத்தார்கள். இலவச சாம்பிள்தான்.


இதே டான்·போர்த் இன்னும் சிறிது தூரம் சென்றதும் தன் பெயரைபுளோர் என்று மாற்றிக்கொண்டது. பேவியூ சந்திப்பில் உள்ள சுப்பர்மார்க்கட்டில் ஒலிவ் எண்ணெயும், வினிகரும் சேர்ந்த கலவையில்தொட்டு சாப்பிடுவதற்கு மிளகு ரொட்டி கொடுத்தார்கள். அதன் ருசிஉலகை மறக்க வைக்கும். அதுவும் இலவசம். இவை எல்லாவற்றையும்இரண்டு மணி நேர இடைவெளியில் ஒரு கை பார்த்துவிட்டது மிகவும்திருப்தியைக் கொடுத்தது. இனி வீடு திரும்பவேண்டியதுதான் மிச்சம்.


வெளியே ஒளி சிந்தும் பனித்துகள்கள் மெதுவாக கொட்டின. நாலுகண்ணாடிகளையும் மேலே ஏற்றி காற்றை கதகதப்பாக வைத்தேன்.என்னை மேலும் சந்தோசப்படுத்த மெல்லிய விசில் அடித்தேன்.


அப்பொழுதுதான் பார்த்தேன். எரிபொருள் இருப்பை காட்டும்முள் Eயிலே தொட்டு தொட்டு மீண்டது. வயிறு பகீரென்றது. காலையில்கிளம்பும்போது அரை ராங் இருந்ததே. எதிர் வந்த எரிபொருள்நிலையத்திற்குள் காரை திருப்பப் பார்த்தேன். ஆனால் லிட்டர் விலை72.0 என்று குறிப்பிட்டிருந்தது. அதிகம். வரும்போது எங்கோ 68.0 என்றுபோட்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.


சுவாசம் வேகமாக வந்தது. இருக்கும் காற்றையும் விசில் அடித்துசெலவழித்துவிட்டேன். அடுத்து வந்த நிலையத்தில் விலை 74.5 என்றுஎழுதியிருந்தது. மிக மிக அதிகம். காரை திருப்பாமல் நேரே விட்டேன்.எந்த நேரமும் பெற்றோல் தீர்ந்துவிடும் அபாயம் நெருங்கியது. முள் இப்போது E யை அணைத்துக்கொண்டு நின்றது. வேகம், வேகம். பெற்றோல்முடிவதற்கிடையில் ஒரு நிலையத்தை கண்டுபிடித்து விடலாம். அப்படிஒரு நம்பிக்கை. கண்டு பிடிப்பேன்.


தினமும் ஒவ்வொரு சுப்பர் மார்க்கட்டாக போகிறேன். காலை,மதியம், மாலை, இரவு என்ற வித்தியாசமே இல்லாமல். நான் வாங்கிசேகரிக்க மறந்தவற்றைத் தேடுகிறேன்.‘உன்னுடைய மேலங்கியை கொளுவி வைக்க ஒரு கொளுக்கிஎங்கோ இருக்கிறது. அதை கண்டு பிடிக்கும்வரை உன் மேலங்கியைகழற்றாதே’ என்று ஒரு சீன அறிஞர் சொன்னார். சுப்பர் மார்க்கட்டுகளைதேடுவதே என் வேலை. எனக்காகவே அவைகள் 24 மணிநேரம்,வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கின்றன.

from:அ.முத்துலிங்கம் படைப்புகள்

1 Comment:

  1. வடுவூர் குமார் said...
    வாவ்!அருமை.
    ஆமாம் உங்கள் கணினியில் ஸ் - கிடையாதா?
    ஃபயர்பாக்ளில் ஸ் வருகிற இடங்களில் s என்று வருகிறது.

Post a Comment