Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியாபிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா பிரித்தானியா

test

செய்தி,செய்திகள்,செய்தியறிக்கை,செய்திஅறிக்கை

பரீட்ச்சார்த்தப் பதிவு


லூயிŠ கரோல் என்பவர் ‘அலி…¢ன் அதிசயஉலகம்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதை நீங்கள் எல்லோரும்சிறு வயதில் படித் திருப்பீர்கள். அவர் எழுதிய வருடம் 1865. இப்பொழுது அவர் இருந்தால் அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கமாட்டார்.ஏனென்றால் ஒரு சுப்பர் மார்க்கட்டிற்குள் நுழைந்ததும் அவருக்கு அப்படிஓர் அதிசய உலகம் கிடைத்துவிடும்.


இந்த உலகத்தில் நான் என் முழு நாளையும் செலவழிக்க சம்மதிப்பேன். இது எனக்கு இரண்டாவது வீடு. எந்த நேரமும் எங்கள் வரவைஎதிர்பார்க்கும் சுப்பர் மார்க்கட்டுக்குள் சில பேர் வாரத்துக்கு ஒரு முறைமட்டுமே வருகிறார்கள் என்று படித்தேன். இதை நம்ப முடிகிறதா? நான்முதல் நாள் இங்கே வந்தபோது அதிசயித்த மாதிரியே இன்றும் அதிசயிக்கிறேன். நான் பிறக்கும்போதே இப்படிப் பிறந்தவனல்ல. அப்படிமாற்றப்பட்டவன். வேடர்கள் தானாக உருவாவதில்லை; மான்களேஅவர்களை உருவாக்குகின்றன, அல்லவா?


ஒரு தாய் தள்ளுவண்டியைத் தள்ளினாள். அவளுடைய மூன்றுவயதுக் குழந்தை ஒன்று வண்டியில் கால்களை மாட்டி தலைகீழாகத்தொங்கிக்கொண்டு சிரித்தது. அதன் கைகள் தரையைத் தொட்டன. தலைஒரு பந்துபோல கைகளுக்கு இடையில் தொங்கியது. சிறிது நேரத்தில்அதற்கு அலுப்புத் தட்டிவிட்டது. தள்ளுவண்டியில் தொங்கியபடிஒவ்வொரு சாமானாக தரையில் இழுத்துப் போட்டது. வண்டியைசிரத்தையாக தள்ளியபடி தாய் பேசாமல் வந்தாள். சுப்பர் மார்க்கட்காரர்களும் ஒன்றுமே சொல்லவில்லை. Free Country என்று சொல் வதன்ஒரு நுனி அன்று எனக்குப் புரிந்தது.


இன்னொரு தள்ளுவண்டியை வேகமாகத் தள்ளியபடி ஓர் இளம்பெண் சென்றாள். மிகப் பழசாகிப்போன திருமண ஆடையில், பாதிஒப்பனையில் எழும்பி நேராக வந்தவள்போல காட்சியளித்தாள். அவள்கையில் ஒரு லிŠட் இருந்தது. அந்தப் பட்டியலை சுப்பர் மார்க்கட் நடைவழி ஒழுங்கின்படி தயாரித்திருந்தாள் போலும். வேகமாகப் போகும்வழியிலேயே அவளுக்கு எந்த இடத்தில் எந்தப் பொருள் இருக்கிறதுஎன்பது தெரிந்தது. வலது கையால் வண்டியைத் தள்ளியபடியே, இடதுகையால் பூப்பறிப்பது போன்ற லாகவத்துடன் சாமான்களைப் பறித்துவண்டியை நிரப்பினாள். கடைசி நடைவழியைக் கடந்தபோது வண்டி யும்நிறைந்தது. லிŠடும் முடிந்தது. திறமையான பெண்.


எந்த சுப்பர் மார்க்கட்டிலும் சில வசதிகள் நிச்சயம் இருக்கும்.எட்டுக்கும் குறைந்த பொருள்கள் வாங்கினால் ஒரு வரிசை; 16 க்கும்குறையவென்றால் இன்னொரு வரிசை; நிறைந்தவர்களுக்கு வேறுவரிசை. வயது குறைந்தவர்களுக்கு ஒன்று. வாடிக்கையாளர்கள் வசதிகருதி இப்படி பல வரிசைகள் இருந்தாலும் நான் எச்சரிக்கையாகவேஇருப்பேன். உதாரணமாக ஒன்பது பால் பாக்கட்டுகள் வாங்கினால் நான்எந்த வரிசையில் நிற்பது. காசாளர் ஒருமுறைதானே மெசினில் பதிவுசெய்கிறார். இரண்டு றாத்தல் தக்காளி மட்டுமே வாங்கினேன், ஆனால்அதில் பத்து பழங்கள் இருக்கின்றன. இப்படியான குழப்பத்தில் எங்கேநிற்பது?‘வாடிக்கையாளர் சேவை’ என்று ஒரு பகுதி இருக்கிறது. உங்கள்கேள்விகளை எல்லாம் இங்கே சமர்ப்பிக்கலாம்.


எனக்கு முன் ஒருசீனாக்காரர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் கீழ்ப்படியும் குணம்தேவைக்கு அதிகமாக இருந்தது. அவர் முறை வந்ததும் மெல்லிய குரலில்தனக்கு நோய் கண்டிருப்பதாகவும், அதைக் குணப்படுத்த டின்னிலேஅடைத்து விற்கும் வெள்ளாட்டுக் கர்ப்பப்பை கிடைக்குமா என்றும்கேட்டார். அந்தப் பெண் அதற்குப் பதிலாக இன்னும் மெல்லிய குரலில்ஏதோ கூறினாள்.



எனக்குப் பின்னால் ஒரு ஆப்பிரிக்கர் நின்றுகொண்டிருந்தார். உடல்பாரத்தை இரண்டு கால்களுக்கும் சரி சமமாகப் பிரிக்காமல் மாறி மாறிநின்று அவŠதைப் பட்டார். இவர் காண்டாமிருகத்தின் கொம்புக்காகநிற்கலாம் என்று பட்டது.


என் முறை வந்தது. அந்தப் பெண் தன் இடது பக்க மார்பில்¦ƒனி·பர் என்று பெயர் எழுதி வைத்திருந்தாள். (வலது பக்கத்து பேர்எங்கள் ஊகத்துக்கு விடப்பட்டிருந்தது). கோடுகள் அடித்த தலை மயிர்.நீட்டிய சதுர நகங்கள். முற்றுப்புள்ளி இல்லாத வசனம்போல முடிவேயில்லாத கண்கள்.


‘என் மனைவி அபூர்வமான ஒரு புடிங் செய்கிறாள். அதற்கு சŠகற்சுவான் இந்தியர்கள் அறுவடை செய்த காட்டு அரிசி ஒரு பாக்கட்வேண்டும். அது இல்லாமல் வீட்டுக்குப் போகமுடியாது. உதவி செய்யமுடியுமா’ என்றேன். ‘வீட்டுக்குப் போக உதவ முடியாது. ஆனால் சுப்பர்மார்க்கட்டை விட்டு வெளியே போக உதவமுடியும்’ என்றாள். இப்பொழுது அவள் சிரிப்பு சிவப்பாக மாறிவிட்டது. நான் கேட்ட பொருள்இருக்கும் திசையைக் காற்றிலே வரைந்து காட்டினாள்.


தள்ளுவண்டியிலே சாமான்கள் நிறைந்த பிறகு எந்த வரிசையில்நிற்பது என்று பலர் குழம்புவது எனக்குத் தெரியும். இதற்கு சில சிம்பிள்விதிகள் இருக்கின்றன. எந்த வரிசை நீளம் குறைந்தது என்று பார்த்துநிற்கக்கூடாது. அது அனுபவக் குறைவைக் காட்டும். உங்களுக்குமுன்னால் நிற்பவர் வண்டிகளிலே என்ன இருக்கிறது. பக்கட்டுகளும்,டின் உணவு வகைகளும், போத்தல் சாமான்களும் என்றால் அதுவிரைவில் முடியக்கூடிய வண்டி . மாறாக பழங்களும், மரக்கறிகளுமாகஇருந்தால் அவை நிறுக்கப்பட்டு விலை பதியப்பட வேண்டும். நேரம்பிடிக்கும். காசாளரிடம் ஞாபகசக்தி பற்றாக்குறை இருப்பின் ஆபத்து.



இன்னொன்று. காசாளரை ஒருமுறை பார்க்கவும். சுறுசுறுப்பானஇளவயதுப் பெண்ணாக, கையிலே திறப்பு வளையம் மாட்டியபடி,தலை முடியிலே பேனாவைக் குத்திக்கொண்டு, ஒரு சிறு விலங்கின் துரிதமான பார்வையுடன் இருந்தால் அந்த வரிசை உத்தமமானது. அதையேதேர்வு செய்யவும். ஒவ்வொரு வண்டியையும் அவள் அதிவேகமாகத்தீர்த்து வைப்பாள்.




என் முறை வந்ததும் வியாபார முறுவலுடன் ‘இன்றைக்கு நாள்எப்படி?’ என்று கரிசனையாக வினவினாள்.


‘இதுவரைக்கும் நல்ல நாளே! பில் தொகையே மீதி நாளை தீர்மானிக்கும்’ என்றேன். அவள் இரண்டு வழுவழுவென்ற புƒங்களையும்ஒரு இன்ச் மேலே தூக்கி அசைத்தாள்.


நான் பொருள்களைத் தூக்கி ஓடும் பெல்ட்டிலே வைத்தேன்.பக்கட்டுகள் பட்டாள வீரர்கள்போல நின்ற நிலையிலே போயின; போத்தல்கள் உருண்டன, டின் உணவு வகைகள் துள்ளிக்கொண்டு நகர்ந்தன.அவளுடைய திறமையான விரல்கள் மெசினில் வேகமாக விளையாடத்தொடங்கின. லாகவமாக சாமான்களைத் தூக்கி மந்திரக் கோடுகளைக்காட்டியதும், மின் கண்கள் அவற்றை நொடியில் கிரகித்து விலைகளைப்பதிவு செய்தன. ஒவ்வொரு பொருளும் டிங் என்ற தாள கதியுடன் ஒலிஎழுப்பி மறுபக்கம் போய்ச் சேர்ந்தது. அந்த அசைவுகள் பேர் போனர‰ய நடனம் போல ஓர் ஒயிலுடன் நடந்தேறின.



தள்ளுவண்டியிலே சாமான்கள் முடியும் தறுவாயில் என் மனைவிஏதோ நினைத்துக்கொண்டு மறுபடியும் உள்ளே ஓடினாள். இது வழக்கமாக நடப்பதுதான். நேரம் நகர்ந்தது; வரிசை நகரவில்லை. என்பின்னால் நின்றவர்கள் ஒரு காலால் மற்றக் காலை உரசத் தொடங்கிவிட்டார்கள்.


இறுதியாக ஒலிம்பிக் §ƒ¡தியைப்போல உப்பு பக்கட்டை தூக்கியபடி ஓடி வந்தாள். டென்னிŠ போட்டியில் காணும் தலைகள்போலஎல்லாம் ஒரே சமயத்தில் திரும்பி என் மனைவியை நோக்கின.


சாமான்களை காரில் ஏற்றுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.சுப்பர் மார்க்கட்காரர்கள் தாங்களாகவே கொண்டுவந்து காரில் ஏற்றிவிடுவார்கள். மிகவும் வசதியான ஏற்பாடு. ஆனால் பொருள்கள் எல்லாம் வந்து சேர்ந்தனவா? யூனிகோ தக்காளி துண்டங்கள் மூன்று டின்கள்வாங்கினோமே, அவை எல்லாம் வந்தனவா என்று மனம் வீடு போய்ச்சேரும் வரைக்கும் அடித்துக்கொண்டிருக்கும். ஆனால் நாங்களாக ஏற்றுவதில் சில அனுகூலங்களும், ஆபத்துக்களும் உள்ளன. தள்ளுவண்டியைரோமாபுரி மன்னர்கள் போட்ட கல்லுப்பாதை போன்ற வீதியில் தள்ளிக்கொண்டு கார் தரிப்பிடத்துக்கு போக வேண்டும். உங்கள் கைகள் இன்னும்முறிந்து கீழே விழாமல் இருக்கும் பட்சத்தில், ‘சனிக்கிழமைரொறொன்ரோ Šடார்’ போல கனம் கனக்கும் சாமான்களை ஒவ்வொன்றாகத் தூக்கி காரிலே ஏற்ற வேண்டும். இதற்கு கெட்டியானஆயுளும், குறைவுபடாத உடல் பலமும் அவசியம்.


பொருள்கள் தெரிவு செய்யும்போது அவற்றின் கால வரம்புகளைப்பார்க்க வேண்டும். இவை சாமான்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுசட்டம். சிலதில் முடிவு தேதி ’30 ƒ¥ன் 2002' என்று துல்லியமாக எழுதியிருக்கும். அது எப்படி? ஒரு நாள் முன்பு கூட ஆரோக்கியமாக இருக்கும்உணவு ஓர் இரவு முடிவதற்கிடையில் பாவனைக்கு மீறியதாக மாறிவிடும். இன்னும் சில ’30 ƒ¥ன் 2002க்கு முன் உத்தமம்’ என்று எழுதியிருக்கும். அதாவது அதற்குப் பிறகும் பாவிக்கலாம். உங்கள் ரசனையையும், ஆரோக்கியத்தையும், பணபலத்தையும் பொறுத்தது. சில ’30ƒ¥ன் 2002க்கு முன் பாவிக்கவும்’ என்று திட்டவட்டமாக இடித்துச்சொல்லும். வைன் வாங்கும்போது மட்டும் முடிவு தேதி தேடவேண்டாம். அவற்றுக்கு முடிவு இல்லை. இன்னும் சொல்லப்போனால்நாள் போகப் போகத்தான் அவற்றின் சுவை விசே„ம் அதிகரிக்கும்என்று சொல்கிறார்கள்.


ஊனமுற்றவர்களுக்கு என்று சக்கர நாற்காலி படம் கீறி வைத்தவரிசை ஒன்று இருக்கிறது. இது மிகவும் வேகமான பாதை. இரண்டு நாள்சிறுநீர் கழிக்காததுபோல முழங்கால்கள் ஒட்ட, கால்களை வாத்துபோலவைத்துக்கொண்டு, இந்த வரிசையில் மாறுவேடமாகப் புகுந்து விரைவில் வெளி வந்துவிடலாம். ஆனால் இந்த தந்திரத்தை ஒரு நாளைக்குஇரண்டு தடவைக்கு மேலே செய்யக்கூடாது.


என்னிடம் இருக்கும் செல்போன் மணி அடிக்காது; அதிர்வுகொடுக்கும். நான் அதை என்னுடைய இடது கால் சட்டைப் பைக்குள்வைத்திருப்பேன். ஒன்றரைப் பக்க லிŠடில் உள்ள சாமான்களை ஒன்றுவிடாமல் ஏற்றிக்கொண்டு வந்து வாகனத்தை வீட்டு கார் பாதையில்திருப்பும்போது ஓர் அதிர்வு வந்தது. கேட்பதற்கு உபயோகிக்கும்அங்கங்களுக்கு வெகு தூரத்திலும், இன்னும் மிகவும் வேண்டிய ஒருஅங்கத்துக்கு அண்மையிலும் இந்த அதிர்வு ஏற்பட்டது. அந்த செல்போனை அப்போது தொடக்கூடாது. மனைவியிடம் இருந்துதான்அழைப்பு வந்திருக்கும். வேறு என்ன? கொழுப்பு நீக்கிய, கடைந்துகட்டப்பட்ட, லக்ரோŠ அகற்றிய 1% பால் பக்கட் ஒன்று வாங்கி வரச்சொல்வாள்.


இன்னும் ஒரு விதி இருக்கிறது. உங்கள் உடம்பில் இருந்து உயிர்பிரியும் ஆபத்து இருந்தாலும் ‘இரண்டு சாமான்கள் மட்டும் வாங்குவதற்காக’ ஒரு சுப்பர் மார்க்கட்டுக்குள் பிரவேசிக்கக்கூடாது. அவசரமாகஉள்ளே நுழைகிறீர்கள். உங்கள் கண்ணிலே முதலில் படுவது தோல் நீக்கியவெள்ளை உருண்டைக் கிழங்கு டின்கள். இரண்டு வாங்கினால் ஒருசுத்தியல் இலவசம். வாங்கிவிடுகிறீர்கள். அடுத்து உங்கள் கண்கள்அகலமாக விரிகின்றன. உப்புநீரில் மிதக்கவிட்ட சாம்பினோன் முழுக்காளான்கள், நாலு டின்களின் விலை ஒரு டொலர்தான். நம்பமுடிகிறதா?வாங்கிவிடுகிறீர்கள். அட , இதைப் பாருங்கள். கதவு கிறீச்சிடும் சத்தத்தைநிறுத்தும் எண்ணெய் டின். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். உங்கள்வீட்டில் ஒன்பது கதவுகள் காவல் செய்கின்றன. ஆனால் ஒரேயொருகதவு மட்டும் கிறீச்சிடுகிறது. மற்றவையும் சீக்கிரத்தில் கிறீச்சிடும் என்றநம்பிக்கை. வாங்கிவிடுகிறீர்கள். இனிமேல் இருபது வருடங்களுக்குஅந்தக் கவலை இல்லை. நீங்கள் பல காலமாகத் தேடிவரும் குளிர்காலத்து மூங்கில் குருத்து. அவற்றிலே இரண்டு வாங்கிவிடுகிறீர்கள்.இடதுகைக்காரர் பாவிக்கும் கத்தரிக்கோல். ஐம்பது வீதம் தள்ளுபடி. இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் வராது. வாங்கிவிடுகிறீர்கள். இடதுகைக்காரருக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுக்கலாம். யாராவது அகப்படுவார்கள். வண்டி நிறைந்துவிடுகிறது.


வீடு வந்து சேர்ந்ததும் உங்கள் மனைவி முதலில் கேட்பது,‘துணிகள் மிருதுவாக்கும் சினகிள் பக்கட் எங்கே?’ என்றுதான்.அப்பொழுதுதான் உங்களுக்கு ஞாபகம் வருகிறது நீங்கள் சுப்பர் மார்க்கட்போனது அதை வாங்குவதற்குத்தான் என்று.இன்னொரு ரகŠயம். நீல்சன் சந்திப்பில் உள்ள சுப்பர் மார்க்கட்டில்காலை 10 - 12 மணிவரை இலவசமான சாம்பிள்கள் உண்பதற் காகத் தருவார்கள். உங்கள் வாங்கும் திறமையை ஊக்கப்படுத்துவதுதான் நோக்கம்.அன்று அறுபது நாட்கள் மூப்பாக்கிய உயர்ரக வெண்ணெய் கட்டிகள்கிடைத்தன. பல விதமான ருசிகளை பரீட்சித்துப் பார்க்கலாம்.


சுற்றுலா தொடர்ந்தது. தமிழ் நாட்டில் ஆற்றின் பெயர்கள்இடத்துக்கு இடம் மாறுவதுபோல இங்கே கனடாவிலும் மக்கோவன்ரோடு திடீரென்று தன் பெயரை டான்·போர்த் என்று மாற்றிக்கொண்டது. கென்னடி சந்திப்பில் இருக்கும் சுப்பர் மார்க்கட்டில் மேப்பிள்சிரப்பும், ரொட்டியும் கொடுத்தார்கள். இலவச சாம்பிள்தான்.


இதே டான்·போர்த் இன்னும் சிறிது தூரம் சென்றதும் தன் பெயரைபுளோர் என்று மாற்றிக்கொண்டது. பேவியூ சந்திப்பில் உள்ள சுப்பர்மார்க்கட்டில் ஒலிவ் எண்ணெயும், வினிகரும் சேர்ந்த கலவையில்தொட்டு சாப்பிடுவதற்கு மிளகு ரொட்டி கொடுத்தார்கள். அதன் ருசிஉலகை மறக்க வைக்கும். அதுவும் இலவசம். இவை எல்லாவற்றையும்இரண்டு மணி நேர இடைவெளியில் ஒரு கை பார்த்துவிட்டது மிகவும்திருப்தியைக் கொடுத்தது. இனி வீடு திரும்பவேண்டியதுதான் மிச்சம்.


வெளியே ஒளி சிந்தும் பனித்துகள்கள் மெதுவாக கொட்டின. நாலுகண்ணாடிகளையும் மேலே ஏற்றி காற்றை கதகதப்பாக வைத்தேன்.என்னை மேலும் சந்தோசப்படுத்த மெல்லிய விசில் அடித்தேன்.


அப்பொழுதுதான் பார்த்தேன். எரிபொருள் இருப்பை காட்டும்முள் Eயிலே தொட்டு தொட்டு மீண்டது. வயிறு பகீரென்றது. காலையில்கிளம்பும்போது அரை ராங் இருந்ததே. எதிர் வந்த எரிபொருள்நிலையத்திற்குள் காரை திருப்பப் பார்த்தேன். ஆனால் லிட்டர் விலை72.0 என்று குறிப்பிட்டிருந்தது. அதிகம். வரும்போது எங்கோ 68.0 என்றுபோட்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.


சுவாசம் வேகமாக வந்தது. இருக்கும் காற்றையும் விசில் அடித்துசெலவழித்துவிட்டேன். அடுத்து வந்த நிலையத்தில் விலை 74.5 என்றுஎழுதியிருந்தது. மிக மிக அதிகம். காரை திருப்பாமல் நேரே விட்டேன்.எந்த நேரமும் பெற்றோல் தீர்ந்துவிடும் அபாயம் நெருங்கியது. முள் இப்போது E யை அணைத்துக்கொண்டு நின்றது. வேகம், வேகம். பெற்றோல்முடிவதற்கிடையில் ஒரு நிலையத்தை கண்டுபிடித்து விடலாம். அப்படிஒரு நம்பிக்கை. கண்டு பிடிப்பேன்.


தினமும் ஒவ்வொரு சுப்பர் மார்க்கட்டாக போகிறேன். காலை,மதியம், மாலை, இரவு என்ற வித்தியாசமே இல்லாமல். நான் வாங்கிசேகரிக்க மறந்தவற்றைத் தேடுகிறேன்.‘உன்னுடைய மேலங்கியை கொளுவி வைக்க ஒரு கொளுக்கிஎங்கோ இருக்கிறது. அதை கண்டு பிடிக்கும்வரை உன் மேலங்கியைகழற்றாதே’ என்று ஒரு சீன அறிஞர் சொன்னார். சுப்பர் மார்க்கட்டுகளைதேடுவதே என் வேலை. எனக்காகவே அவைகள் 24 மணிநேரம்,வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கின்றன.

from:அ.முத்துலிங்கம் படைப்புகள்


கனடாவில் இருப்பவர்களுக்கு கார் அவசியம்.
அதிலும் முக்கியம் அதை ஓட்டத் தெரிவது.

அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் கார் ஓட்டியவர்கள் தவிர
மற்ற எல்லோரும், சர்வதேச ஓட்டுநர் லைசென்Š இருந்தாலும்கூட ,
முறைப்படி எழுத்துப் பரீட்சை, பிறகு கார் ஓட்டும் சோதனை என்று
சித்தியடைந்த பின்னர்தான் இங்கே ஓட்டுநர் உரிமம் பெறமுடியும்.

ஆகவே முதலில் எழுத்துப் பரீட்சைக்கு போனேன், இருநூறு பக்க
போக்குவரத்து விதிகளை கரைத்துக் குடித்த பிறகு. கேள்விகளைக்
கம்புயூட்டரே கேட்கும் என்பது நான் எதிர்பாராதது.

மாதிரிக்கு ஒரு கேள்வி:

எதிரில் STOP குறியீடு தென்பட்டால் என்ன செய்யவேண்டும்?

அ) திரும்பிப் போகவேண்டும்.
ஆ) திடீரென்று பிரேக் போடவேண்டும்.
இ) நின்று, கவனித்து, அபாயம் தவிர்த்து போகவேண்டும்.
ஈ) வேகமாகக் கடக்கவேண்டும்.

கோயிலிலே பூக்கட்டி வைத்து ஒன்றைத் தொடுவதுபோல நானும்
ஒன்றைத் தொடவேண்டும். இப்படியே தொட்டுத் தொட்டு இந்த பரீட்சை
யில் பாஸாகிவிட்டேன்.

பிறகு கார் ஓட்டும் பயிற்சிக்கு ஒரு குருவை தேடினேன். பயிற்சி
நிலையத்தில் இருந்து ஒருவரை அனுப்பி வைத்தார்கள். இளைஞர். வயது
30 இருக்கலாம். பெயர் கதிர்காமத்தம்பி கதிரைவேற்பிள்ளை என்றார்.
மொழியகராதி படைத்த கதிரைவேற்பிள்ளைக்கும் தனக்கும் ஒருவித
சம்பந்தமும் இல்லை என்று எவ்வளவு துருவியும் மறுத்துவிட்டார்.

சுருக்கம் வேண்டி நான் அவரை ‘குருவே’ என்று விளித்தேன்.
அவரோ வயது கருதி என்னை ‘அண்ணை’ என்றே அழைத்தார்.

‘அண்ணை, இது கொழும்பு இல்லை இந்த நாட்டு டிரைவிங் வேற
மாதிரி. உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமோ? தெரியுமென்றால் படித்தது
முழுவதையும் மறவுங்கோ’ என்றார்.

‘குருவே, மறதி என்னோடு கூடப்பிறந்தது என்று அம்மா அடிக்கடி
சொல்லுவா. நான் நல்லாய் மறப்பன்’ என்று உத்திரவாதம் அளித்தேன்.
அப்படியே எங்கள் பயிற்சி ஆரம்பமானது.

முதலாம் நாள். நான் சீட் பெல்ட்டை இறுக்கக் கட்டி, Šஸ்டியரிங்
வளை யத்தை நசுக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்
பொழுதே உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. கார் ஒரு இஞ்ச்கூட
இன்னும் நகரவில்லை.

குரு சொன்னார், "நீங்கள் பயப்பிடாதையுங்கோ. நான் எல்லாம்
படிப்பிச்சுத் தருவன்.’
முதலாம் பாடம்.

‘உங்களுக்கு KGB தெரியுமோ? ரஸ்‰ய உளவுத்துறை?’

‘ஓ, நல்லாய்த் தெரியும்.’

‘K என்றால் Key, G என்றால் Gear, B என்றால் Brake இதை
ஞாபகத்தில் வைத்திருங்கோ. அதாவது சாவி போட்டு காரை இயக்கி,
கியரை போட்டு பிறகு பிரேக்கை இறக்கி, இந்த ஒழுங்கு முறை
மாறாமல் செய்யவேண்டும். இரண்டு, மூன்று முறை இந்தப் பயிற்சி
நடந்தது. பிறகு கார் எறும்பு வேகத்தில் ஊர்ந்தது.

சிவப்பு விளக்கு வந்தது. கார் பிரேக்கை அழுத்தி நிற்கவைத்தேன்.
நின்றது.

‘குருவே’ என்றேன்.
‘என்ன?’
‘இப்ப மூச்சை விடட்டா?’
‘ஐயோ! ஐயோ! மூச்சை விடுங்கோ. அதுவும் நான் சொல்ல
வேணுமே’ என்றார்.
முதலாம் பாடம் முடிந்தது.

அடுத்த நாளே குருவுக்கும் எனக்கும் இடையில் சிறு மனŠதாபம்
வந்துவிட்டது.

‘காரை எடுங்கோ’ என்றார். நான் பிரேக்கை தளர்த்தி, பெல்ட்டை
கட்டி, சாவியைப் போட்டு காரை கிளப்பினேன். குரு ‘ஐயோ’ என்று
தலையில் கையை வைத்து, ‘அண்ணை, என்ன செய்யிறியள்?’ என்றார்.

‘FBI. பிரேக்கை Free பண்ணி, Belt ஐ கட்டி, Ignition ஐ Šடார்ட்
பண்ணினன்.’

‘நீங்கள் விளையாடுறியள். நான் KGB என்றல்லோ சொன்ன
னான்.’

‘அட , ஓ! FBI அமெரிக்க உளவுத்துறை. இன்னும் ஒருபடி மேலே
என்றதால் அப்படி செய்துபோட்டன். இனிமேல் கவனமாயிருப்பன்.’

குரு சிரிக்கவில்லை.

என் குருவிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவர் முன்கோபக்காரர்.
கோபம் வந்தால் அதை அடக்கத் தெரியாது. சத்தம்போட்டு ஏசத்
தொடங்கிவிடுவார். இதைத் தடுக்கும் தந்திரமாக காரிலே இருக்கும் சிகரட்
லைட்டரை உள்ளே தள்ளிவிடுவார். அது சூடாகி, சினந்து துள்ளி
வெளியே வரும்வரை வாய் திறக்கமாட்டார். அந்தக் காத்திருத்தலில்
அவர் கோபம் கொஞ்சம் தணிந்துவிடும்.

அன்றும் அப்படித்தான். சிகரட் லைட்டரை உள்ளே தள்ளிவிட்டார்.
அது சிவந்துகொண்டு வரும்போது அவரின் முகத்தின் சிவப்பும் குறைந்
தது.

தினம் தினம் குரு வந்தார். தினம் தினம் சிகரட் கொளுத்தியை
உள்ளே தள்ளினார். தினம் தினம் சிறு சண்டையும் வந்தது.

‘வலது பக்கம் திருப்பவேணும்’ என்றார் குரு.

சிவப்பு விளக்கு எரிந்தது. நான் காரை நிற்பாட்டினேன். பிறகு
மெதுவாக ஊர்ந்து பாதையில் ஒரு வாகனமும் ஆபத்தை தருவதற்கு
தயாராக இல்லை என்பதை நிச்சயித்துக்கொண்டு காரை எடுத்தேன்.

குரு ‘வெரிகுட்’ என்றார்.

அடுத்ததும் வலது பக்கம். குரு ‘வெரிகுட்’ என்றார்.

மீண்டும் வலது பக்கம். பச்சை விழுந்துவிட்டது. நான் காரை
நிறுத்தி, மெதுவாக இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு, ஊர்ந்தேன்.

‘அண்ணை, ஏன் காரை நிறுத்திறியள். உங்களுக்கு பச்சை
போட்டிருக்கிறான். எடுங்கோ, எடுங்கோ’ என்றார்.

‘குருவே, நான் பரீட்சைக்கு போகும்போது பச்சை விளக்குக்கும்
இப்படி கவனமாக எடுத்தால் இன்னும் அதிக மார்க்Š அல்லவோ
போடுவான்’ என்றேன்.

குருவின் முகம் கடுகடுத்தது. பாடம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

நாலு நாள் பாடம் எடுக்கவும் மறுத்துவிட்டார்.
மறுபடியும் தயாரிப்பு தொடங்கிய நாள் குருவின் முகத்தில் கல
வரம் மறைந்து, சாந்தம் வெளிப்பட்டிருந்தது. நான் ஒரு பட்சி செய்வது
போல வாயை திறந்தேன்.

‘குருவே, எனக்கு ஒரு ஐயம்?’
‘கேளுங்கோ, உங்களுக்கு உடம்பு முழுக்க ஐயம்தானே’ என்றார்.

‘பெரிய ட்ரக் வந்தால் அவைக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு பாதசாரி வந்தால் அவருக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு சைக்கிள் வந்தால் அவருக்கு முழு ரோட்டையும் கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு மோட்டார் சைக்கிளுக்கும் முழு ரோட்டும் கொடுக்க
வேண்டும்?’
‘ஓம்.’
‘ஒரு பŠ வந்தால் அவர் வளைத்து எடுத்துப்போக முன்னுரிமை
கொடுக்க வேண்டும்?’
‘ஓம்.’
‘அதுவும் பள்ளிக்கூட பŠ என்றால் அது நிற்கும்போதுகூட
பின்னால் 20 அடிதூரம் தள்ளித்தான் காரை நிறுத்தவேண்டும்?’
‘ஓம்.’
‘அம்புலன்Š, பொலீŠ, இன்னும் அவசர வாகனங்கள் வந்தால்
ஒதுங்கி கரையில் நிற்கவேண்டும்?'
‘ஓம்.’
‘அப்ப ஏன் மினக்கெட்டு நான் கார் பழகிறன்?’
‘அதுதான் எனக்கும் தெரியவில்லை. உங்களுக்காக 72 பŠ ரூட்கள்
இங்க வைத்திருக்கிறான்கள்.’

நான் சொண்டுகளை மடித்து வாயை மூடினேன்; புத்திசாலித்தனம்
ஒழுகாமல் பார்த்துக்கொண்டேன்.

என்னுடைய பரீட்சை தினம் நெருங்கியது. நான் இப்பொழுது
சிக்னல் விளக்குகளுக்கிடையில் மூச்சுவிடப் பழகிவிட்டேன். இடது
பக்கத் திருப்பம், வலது பக்கத் திருப்பம், வீதி மாறுவது எல்லாம் எனக்கு
தண்ணீர் பட்ட பாடு.

‘நிற்பதுவே, எடுப்பதுவே, ஓடுவதுவே.’ இதுவே என் சிந்தனை.
ஒரு சிறு ஒழுங்கை வழியாக குரு என்னை ஓட்டச்சொன்னார்.
STOP குறியீடு வந்தது. நிதானமாக நின்று குரு சொல்லித் தந்தபடி ‘ஒன்று,
இரண்டு, மூன்று’ என்று எண்ணி பிறகு காரை எடுத்தேன். அடுத்த
STOPல் பாதை ஓவென்று வெறுமையாக இருந்தது. ஒரு குருவியும்
இல்லை. ரோட்டை பார்க்க வாய் ஊறியது. அப்படியே நிற்காமல் எடுத்து
விட்டேன்.

‘என்ன அண்ணை, சோதனை வருகுது, நீங்கள் STOP சைனில்
நிற்காமல் இப்படி எடுக்கிறியள்?’ என்றார் எரிச்சலுடன்.

‘இல்லை, குருவே! ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லித்தான்
எடுத்தேன். கொஞ்சம் கெதியாய் எண்ணிப்போட்டன்.’

பரீட்சைக்கு இன்னும் ஒரேயொரு நாள்தான் இருந்தது. குருவுக்கு
என் சாரதியத்தில் நம்பிக்கை கிடையாது. எனக்கும்தான்.
அன்றுவரை சொல்லித் தந்த விதிகள் எல்லாவற்றையும் குரு
இன்னொரு முறை ஒத்திகை பார்த்தார்.

கார் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஓட்டு வளையத்தை
என்னுடைய கை இறுக்கிப் பிடித்தபடியிருந்தது.
குரு கத்தினார்.
‘ஒழுங்கையை மாத்துங்கோ, இடது பக்கம் திரும்ப
வேணும். இடது பக்கம்.’

‘எந்த இடது பக்கம்? எந்த இடது பக்கம்?’

‘வலது பக்கத்துக்கு எதிர் பக்கம்.’

ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது.
அன்று காருக்கு சிறிய காயந்தான்.
கடைசியில் சோதனை தினம் வந்தது. எனக்கு வாய்த்த பரீட்சைக்
காரர் ஒரு வெள்ளைக்காரர். என் பரீட்சைத் தாளை அட்டையில் செருகிக்
கொண்டு, தன் அங்கங்களை அநாவசியமாக தொந்திரவு படுத்தக்கூடாது
என்பதுபோல மெதுவாக நடந்துவந்தார். காரிலே ஏறியிருந்து கட்டளை
களை கொடுத்தார். அதே சமயம் அவருடைய கடைசி சாப்பாட்டின்
மிச்சங்களை நாக்கினால் துளாவி தேடினார்.

என் குருவுடன் போகும்போது செய்த அத்தனை தவறுகளையும்
அன்று செய்தேன். போதாததற்கு ஒரு புதுவிதமான பிழையையும் நானா
கவே கண்டுபிடித்து அதையும் குறைவின்றி செய்தேன்.

இடது பக்கம் திரும்புவதற்காக நாற்சந்தியில் நின்றேன். பச்சை
விழுந்து விட்டபடியால் முன்னுக்கு வந்து வசதியான தருணத்திற்காக
காத்திருந்தேன். மஞ்சள் வந்துவிட்டது. மூச்சை பிடித்து காரை எடுத்தேன்.
ஆண்டவனால் அனுப்பப்பட்டதுபோல அந்த நேரம் பார்த்து பாதசாரி
ஒருத்தர் சாவதானமாக ரோட்டை கடந்தார். அதி வேகத்தில் எதிராக ஒரு
காரும் வந்துகொண்டிருந்தது. தவிர்க்கமுடியாது. அம்புப் பாய்ச்சலுக்கு
சற்று குறைவான வேகத்தில் காரை விட்டேன். பாதசாரியின் பிருட் டத்தை
மெதுவாக இறகு தடவுவதுபோல உரசிக்கொண்டு கார் போனது.

பனிக்குளிர் காலங்களில் குளியலறைப் பக்கமே போய் பழக்கமில்லாத
அந்த வெள்ளையதிகாரி அப்போதுதான் குளித்தவர்போல தொப்பலாகி
விட்டார்.

எத்தனை தடவை என்னுடைய சோதனை முயற்சி தொடர்ந்தது
என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். கடைசியில், விறைக்
கும் ஒரு குளிர் கால முன்மதியத்தில், ரோட்டு ஓரங்களில் பனிச்சேறு
குவிந்திருக்கும் நல்ல நாளில், பாதசாரிகள் எல்லாம் விடுப்பில்
போய்விட்ட ஒரு சுப நேரத்தில், எனக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்தது.

அதற்கு பிறகு சில வி„யங்களை நானாகவே கற்றுக்கொண்டேன்.
மோல்களில் ஒரேயொரு ‘நிறுத்தும்’ இடத்தை கண்டு நான் அதை இலக்கு
வைத்து ஓட்டிப் போகும்போது யாரோ பதினாறு வயது தேவதை படு
வேகத்தில் வந்து பின்பக்கமாக காரை நுழைத்துவிடுகிறாள். மறுபடியும்
மோலை சுற்றவேண்டும். அப்படியான தருணங்களில் இப்போ
தெல்லாம் கண்மண் தெரியாமல் ஓட்டி இடத்தை பிடித்து விடுகிறேன்.

சில ‘நிறுத்தும்’ இடங்களில் பார்க்கிங் மீட்டர் இருக்கும். அதற்குள்
நாலு டொலர் போட்டால் நாலு மணி நேரம் நிற்பாட்டலாம். சில
வேளைகளில் மூன்று மணி நேரத்தில் வந்த வேலை முடிந்துவிடும். மீதி
ஒரு டொலரை மெசினிலிருந்து எப்படி மீட்பது என்று எனக்கு தெரிய
வில்லை. இதை குரு சொல்லித்தர மறந்துவிட்டார்.

நான் கார் ஓட்டுவதற்கு பத்து விரல்களையும் பாவிக்கிறேன்.
கனடாவில் ஒன்பது விரல்களில்தான் கார் ஓட்டவேண்டும். அப்படித்
தான் பலர் செய்கிறார்கள். வலது கையின் நடுவிரலை எதிரே வருபவர்
களையும், பின்னுக்கு இருந்து வந்து வேகமாக முன்னேறுபவர்களையும்,
குறுக்கே மறிப்பவர்களையும் வசை பாடுவதற்காக தனியே வைத்திருக்க
வேண்டும். என் குரு அதையும் படிப்பிக்கவில்லை.

ஆனால் ‘எல்லாம் படிப்பிச்சுத் தருவன்’ என்று உத்திரவாதம்
கொடுத்த குரு பெரிய பச்சை துரோகம் ஒன்றை எனக்கு செய்துவிட்டார்.

Šடியரிங் வளையத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரம் பின்னுக்கு
தள்ளப்பட்ட இருக்கையில் சாய்ந்து இருந்துகொண்டு, ரேடியோ முழங்க,
ஒரு கையால் செல் போனைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் நூறு
பாகை சூட்டில் நுரை பொங்கித் தள்ளும் ‘லாத்தே’ கோப்பியை கடுதாசி
குவளையில் உறிஞ்சியபடி, அதிவேக நெடுஞ்சாலையில் 120 கி.மீ
வேகத்தில் போகும் ரகŠயத்தை மட்டும் குரு எனக்கு சொல்லித் தரவே
இல்லை.
from : அ.முத்துலிங்கம் படைப்புகள்


நான் வீடு வாங்கியபோது அதற்கு ஏற்கனவே ஒரு
சொந்தக்காரர் இருந்தார். இது எனக்குத் தெரியாது. வீட்டு ஏƒண்ட் இதை
என்னிடம் இருந்து மறைத்துவிட்டார். வீட்டின் முந்திய சொந்தக்காரர்
செய்த சூழ்ச்சி யாகவும் இருக்கலாம். வீட்டுப் பத்திரம் எழுதிய சட்டத்
தரணியும் மற்றவர்களும் சேர்ந்து செய்த சதி என்றே நினைக்கிறேன்.

என்னுடைய மாமா கனடாவில் பல வருடங்கள் வாழ்ந்தவர். அதி
புத்திசாலி. வந்து இரண்டு வருடங்கள் முடிவதற்கிடையில் Mississauga,
Saskatchewan போன்ற இடங்களின் பெயர்களை ஒருவர் உதவியுமின்றி
Šபெல்லிங் பிழை இல்லாமல் எழுதப் பழகிக்கொண்டவர். அப்படி
என்றால் பாருங்கள். அவர்தான் எனக்கு வீடு வாங்கும் எண்ணத்தை
விதைத்தார். ‘வீடுவரை உறவு’ என்றும் உபதேசித்தார். வீடு இல்லா
விட்டால் உறவுக்காரர்கள் தகுதி கருதி வரமாட்டார்களாம்.

நான் வீடு வாங்கி குடிவந்து இரண்டு நாட்களாக ஒரு உறவினரும்
வரவில்லை. என் வீட்டு பின் தோட்டத்தில் அசைவில் வேலை செய்யும்
ஒரு லைட் இருந்தது. மூன்றாம் நாள் இரவு இந்த லைட் திடீரென்று பற்றி
எரிந்தது. எட்டிப் பார்த்தபோது தெரிந்தது மின்னும் மஞ்சள் கண்களுடன்
ஒரு விலங்கு. ஒரு தாயும் இரண்டு குட்டிகளும். வாலிலே வரிபோட்ட
கறுப்பு நிற Šகங். இவைதான் நான் அறியாமல் என் வீட்டுக்கு அடியில்
குடியிருந்தவை.

பகலில் அவை போய் வளையில் தூங்கும். அந்த நேரம் நான்
தோட்டத்தை எட்டிப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவேன். இரவில்
அவை வேட்டைக்குப் புறப்படும். நான் படுக்கைக்குப் போவேன். ஏதோ
அவைதான் வீட்டு உடமைக்காரர் போலவும், நான் வாடகைக்கு வந்தவன்
போலவும் காரியங்கள் நடந்தன. ஆனால் வீட்டு வரியில் ஒரு சிறிய
பகுதியைக்கூட கட்டுவதற்கு அந்த விலங்கு சம்மதிக்கவில்லை.


எனக்கும் சில உரிமைகள் இருந்தன. அதை நிலைநாட்டுவதில் நான்
குறியாயிருந்தேன். தயிர் வரும் காலி பிளாŠடிக் குவளைகளில் என்
மனைவி வளர்த்த செடிகளை எல்லாம் இரவு நேரத்தில் இவை நாசம்
செய்தன. தோட்டத்தில் கண்ட கண்ட இடங்களில் கிண்டி வைத்தன.


கடைசியில் ஒரு நாள் தொல்லை தாங்காமல் விலங்கு வதை தடுப்பு
நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன். என்னால் தோட்டப் பக்கம்
போகமுடியவில்லை. அவைகள் காற்றிலே பரப்பி விடும் துர்நாற்றம்
சகிக்க முடியாதது. என்னையோ என் குடும்பத்தினரையோ இல்லை
விருந்தாளிகளையோ கடித்துவிடும் அபாயம் உண்டு என்று புலம்பி
னேன்.
‘ஐயா, அவை காயம் பட்டிருக்கின்றனவா?’
‘இல்லை.’
‘உயிராபத்தில் இருக்கின்றனவா?’
‘இல்லை.’
‘அவற்றிற்கு தீங்கிழைக்க யாராவது முயற்சிக்கிறார்களா?’
‘இல்லை.’
‘அப்படி என்றால் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை.
அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் நாங்கள் வந்து அவற்றை
சேமமான இடத்துக்கு நகர்த்தி விடுவோம்.’
‘நன்றி ஐயா நன்றி. ஆபத்தில் இருப்பது நான். வீட்டு வரி கட்டுவதும்
நான் அல்லவோ.’
அதிகாரியின் நாற்காலி எப்போதும் நிலத்தை தொடுவதில்லை.
அவருடைய வார்த்தையில் அசட்டைத்தனம் கூடிக்கொண்டே போனது.
என்னுடைய பதிலும் மிகவும் தரக்குறைவானதாக இறங்கும் அபாயம்
நெருங்கியது.


மனித வதை தடுப்பு சங்கம் என்று ஒன்றிருக்கிறதா? அப்படி
என்றால் அதற்கு தொலைபேசி செய்யலாம். தோட்டத்தை Šகங் ஆக்கிர
மித்துக் கொள்ளட்டும். சரி, வீட்டையாவது முழுவதுமாக அனுபவிக்க
லாம் என்று நான் நினைத்தால் அதற்கு இன்னும் பெரிய தடை ஒன்று
வந்து சேர்ந்தது.

இங்கே நான் மிக வேகமாகப் படித்த பாடம் ஒன்று உண்டு. இது
எங்கள் சரித்திர ஆசிரியர் கற்றுத் தந்ததற்கு நேர் மாறானது. ஆதி காலத்
தில் இருந்து மனித நாகரிகம் வளர்வதற்கு காரணம் அவன் இயற்கையை
வசப்படுத்தியதுதான் என்று அவர் சொல்வார். மழை நீரைத் தேக்கி
விவசாயம் செய்தான். வெய்யிலிலே உணவைப் பதப்படுத்தி நீண்ட நாள்
சேமித்து வைத்தான். காற்றை மறித்து ஆலைகள் கட்டினான். ஆற்றை
அடைத்து மின்சாரம் உண்டாக்கினான்.

ஆனால் கனடாவில் எல்லாம் நேர்மாறாக நடந்தது. இயற்கை
எனக்கு போதிய வேலைகளை உற்பத்தி செய்தவண்ணம் இருந்தது.
நீலமான வானம் சடுதியாக நிறம் மாறி பனிக்கட்டிகளைக் கொட்டும்.
நான் அவற்றைக் கொத்தி அப்புறப்படுத்த வேண்டும். மழையும்
வெய்யிலும் மாறி மாறி வேலை செய்து புல்லை வளர்க்கும். நான் அவை
வளர வளர வெட்டவேண்டும். மரத்தில் உள்ள இலைகள் இடையறாது
கொட்டும். நான் அவற்றை அள்ளியபடியே இருக்கவேண்டும். இப்படி
வீட்டைப் பராமரிப்பதில் என் அருமையான நேரம் முழுவதையும்
செலவு செய்தேன். அப்படியும் பணி முடிவு பெறுவதில்லை.

என்னுடைய வீட்டு வாசலில் இடது பக்கம் ஐந்து Šவிட்சுகள்
இருக்கும். அவற்றில் வேலை செய்ய வேண்டிய ஐந்து பல்புகள் எக்குத்
தப்பாக வீட்டின் பல பாகங்களில் இருந்தன. எந்த Šவிட்சைப்
போட்டால் எந்த பல்ப் எரியும் என்பதை என் மனைவி இரண்டு நாளில்
படித்துவிட்டாள்.

அதிகாலையில் நான் எழும்பும்போது சொல்வாள் இந்த Šவிட்ச்
பல்ப் வேலை செய்யவில்லை என்று. இவளுக்கு மாத்திரம் எப்படி
முதலில் தெரிந்துவிடுகிறது. இந்தக் கதவுத் துளையில் சாவி போக
மறுக்கிறது. இது எப்படி? நடு இரவில் சாவி வந்து காதிலே ரகŠயமாக
சொன்னதா?

நாற்காலிக்கு கால்கள் நாலு என்பது உலகம் முழுக்க தெரிந்த
வி„யம். ஒரு குறிப்பிட்ட நாற்காலிக்கு மூன்று கால்கள் உண்டான
செய்தி அவளுக்கு எப்படியோ முதலில் கிடைத்துவிடுகிறது.

இவற்றுக்கெல்லாம் பரிகாரம் நானே தேடவேண்டும். தோட்டத்து
வேலிகளை புதுப்பிப்பதும், கூரையை மாற்றுவதும், வாசல் வழிப்
பாதையைச் செப்பனிடுவதும் என் வேலையே. இது தவிர எந்த நேரமும்
குளிர்பெட்டியோ, சலவை யந்திரமோ, துடைப்பானோ, குளிரூட்டியோ
உடைந்துவிடும் சாத்தியக்கூறு டமோகிளீ…¢ன் கூரிய வாள் போல என்
தலைக்குமேல் தொங்கியது.

அப்படியான உற்பாதம் சீக்கிரமே ஒருநாள் சம்பவித்தது.

பனிப்போர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். நம்பாதீர்கள்.
இது தினமும் என் வீட்டில் நடக்கிறது. பனிப்புயல் வீசுகிறது. பத்து வருட
முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் என் வீட்டு கார் பாதையில்
கொட்டும் பனிப்பாளங்களை நான் அதிகாலை தொடங்கி மதியச்
சாப்பாடு நேரம் வருவதற்கிடையில் வெட்டிச் சாய்த்து சுத்தம் செய்து
விட்டேன். அப்படிச் செய்து முடிக்கவும் என்னையே பார்த்துக்
கொண்டிருந்த வானம் பின்னேரத்துக்கான பனியை கொட்டத் தொடங்
கியது.
வெளியே -20 டிகிரி என்றால் உள்ளேயும் குளிர் உதறியது.

உள்ளாடை, மேலாடை, வெளியாடை என்று மடிப்பு மடிப்பாக அணிந்
திருந்த போதும் குளிர் தாங்க முடியவில்லை. தட்ப வெப்ப நிலை முள்
சரசரவென்று பங்குச்சந்தை போல கீழே சரிந்தது. பார்த்தால் †£ட்டர்
வேலை செய்யவில்லை. எரிவாயுவை வெட்டிவிட்டார்களோ, அல்லது
மெசினில் ஏதோ குறைபாடோ குளிர் ஏறிக்கொண்டே போனது.
உடனேயே அவசர நம்பரை தொடர்பு கொண்டேன். மறுமுனையில்
இருந்து நீங்கள் பேசுவது புரியவில்லை என்று கத்தினார்கள்.


அதற்கு காரணம் இருந்தது. என் சொண்டுகள் விறைத்துவிட்டன.
அவை ஒத்துழைக்காததால் நான் பேச உத்தேசித்திருந்த வசனங்கள் வேறு
வாசகங்களாக வெளியே வந்தன.
‘நாங்கள் நடுங்கிக்கொண்டு இருக்கிறோம்’ என்று சத்தம்
வைத்தேன்.
பல மணி நேரம் கழித்து எரிவாயு கம்பனியிலிருந்து பூமி அதிர
மிதித்து நடந்தபடி ஒருத்தர் வந்தார். பெருத்த வயிற்றின் நடுவில் equator
போல சுற்றியிருந்த பெல்ட்டில் பலவிதமான ஆயுதங்களை அவர்
தரித்திருந்தார். அவர் நடக்கும்போது அவை மணிகள்போல அசைந்து
சப்தித்தன. வந்தவர் மூச்சு வீச ஆராய்ந்தார். பிறகு அப்படியே மல்லாக்
காக சரிந்துவிட்டார். நாலு மணி நேரம் படுத்து வேலையை முடித்து
உருண்டு பிரண்டு எழும்பினார். அதற்குப் பிறகுதான் எங்கள் ரத்தம் சூடு
பிடிக்கத் தொடங்கியது.
அவர் தந்த பில்லை பார்த்த கணமே நான் மலைத்துவிட்டேன்.
ரத்தம் கொதித்தது. இதை முதலிலேயே தந்திருக்கலாம். திருத்த வேலை
களை செய்யாமலே ரத்தம் சூடாகியிருக்கும். இப்படி நான் சொல்ல
நினைத்தேன். ஆனால் நான் சொல்லப் போவதை கேட்க யார் இருக்கி
றார்கள்.

மூன்றாம் வீட்டு கிழத் தம்பதிகள் எப்பொழுது பார்த்தாலும்
வீட்டைப் பராமரித்தபடி இருப்பார்கள். மழைக்காலங்களில் ஒரு
நாளைக்கு ஒரு இன்ச் வீதம் வளரும் புற்களை ஓயாது வெட்டுவார்கள்.
வெய்யில் காலத்தில் அதே புற்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். காற்ற
டித்து கால நேரம் பாராமல் கொட்டும் இலைகளை வாரித் தள்ளுவார்
கள். கையுறை மாட்டி சுவர்களுக்கு பெயின்ற் அடிப்பார்கள். கர்வம்
பிடித்த ஒரு கடுமையான எசமான்போல அந்த வீடு அவர்களை
விரட்டியபடியே இருக்கும்.

அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏலத்தில் மலிவாக வாங்கிய
மரண ஊர்வலக் கார் ஒன்றில் அடிக்கடி வந்து, வீட்டை விற்றுவிட்டு
முதியவர் விடுதியில் போய் தங்கும்படி பெற்றோரை வற்புறுத்திக்
கொண்டிருந்தான்.

எங்கள் பூர்வீக நாட்டில் ஒரு வீட்டை வாங்கிப் போட்டால் அது
உங்களுக்கு அடிமையாக உழைக்கும். விறாந்தையில், சாய்ம¨னைக்
கதிரையில் படுத்தபடி வெளியே ஓடிப்பிடித்து விளையாடும் அணில்
களைப் பார்க்கலாம். வாழை மரங்கள் வளர்வதையும், முருங்கைப்பூ
பூப்பதையும் பார்த்து ரசிக்கலாம். மணிகளைக் குலுக்கி திரும்பும் பசு
மாடுகளைத் தடவி விடலாம். குடைக்காரன் வந்து குடை திருத்துவான்;
ஈயக்காரன் வந்து ஈயம் பூசுவான். தானாகப் பழுத்த மாம்பழங்கள்
தொப்புதொப்பென்று விழும். அவற்றைக் கடித்துச் சாப்பிடலாம்.
ஒன்றுமே செய்யத் தேவையில்லை. இன்பலோகம்தான்.

ஆனால் இங்கே கதை வேறு. சாய்மனைக் கதிரையை கண்ணிலே
காட்டக்கூடாது. வீட்டுக்காக ஓடி ஓடி உழைக்கவேண்டும். அப்போது ஒரு
எண்ணம் தோன்றியது. சூரியன் மூளைக்குள் இறங்கியதுபோல ஒரு
வெளிச்சம்.


உலகத்திலேயே இரவு முழுக்க திறந்து வைத்திருக்கும் இடங்கள்
இரண்டே இரண்டு. உணவகம், மற்றது கேளிக்கை அரங்கம். ஆனால்
இந்த உலகில் வட அமெரிக்காவில் மட்டுமே Home Depot என்னும்
வீட்டு பராமரிப்பு சாமன்கள் நிறுவனம் இரவு, பகல் 24 மணி நேரமும்
திறந்திருக்கும். அதிகாலை மூன்று மணிக்குகூட எறும்புகள் சீனிக்
கட்டியை தூக்குவதுபோல சாமான்களைக் காவியபடி சனங்கள் நிரை
யாகப் போய்க்கொண்டிருப்பதைக் காணலாம்.

ஒரு பெரிய தத்துவத்தின் சிறிய வாசல் எனக்கு அப்போது திறந்தது.
நானும் முழு ஆர்வத்தோடு சில பராமரிப்பு வேலைகளைப் பழகிக்
கொள்வது என்று தீர்மானித்தேன். ஒரு ஆள் உதவியோடு பியூŠ
மாற்றவும், இரண்டு பேர் உதவியோடு பல்ப் பூட்டவும் செய்தேன்.
இப்பொழுது மூன்றுபேர் உதவியோடு பி·ல்டர் மாற்றப் பழகிக்
கொண்டு வருகிறேன். மீதி வேலைகளுக்கு இரவும் பகலும் பராமரிப்புக்
காரர்களைத் தேடவேண்டும்.

ஒரு நாள் வெளியே புறப்பட்ட நான் திடுக்கிட்டுவிட்டேன். அல்லும்
பகலும் உழைத்த கிழத் தம்பதியினர் வீட்டு முகப்பில் SOLD என்று
வாசகம் எழுதிய பலகை ஆடிக்கொண்டிருந்தது. இதிலே ஆச்சரியம் தரக்
கூடிய வி„யம் என்னவென்றால் அப்பொழுதுகூட வீட்டு முற்றத்தில்
குந்தியிருந்தபடி அவர்கள் இருவரும் புல்லிலே களை பிடுங்கிக் கொண்
டிருந்ததுதான்.

அன்றே செயலில் இறங்கினேன். எங்கள் வீதியில் ஒரு சமூக நல
மையம் இருந்தது. நான் வீட்டைப் பராமரிக்கும் பலவிதமான கலை
களையும் கற்றுத் தேர்ந்துவிடவேண்டும் என்ற ஆவலில் அவர்களிடம்
முதலில் தச்சுவேலை வகுப்புக்கு கட்டணம் கட்டினேன்.

வகுப்புக்குள் காலடி வைத்ததும் ஈர மரத்தின் மணம் மூக்கில்
பட்டது. வகுப்பில் பதினைந்து பேர் இருந்தார்கள். எங்கள் ஆசான் இளம்
வயதுக்காரர். தோளிலே வார் மாட்டிய கால் சட்டையும், பனியனும்
அணிந்திருந்தார். பதினாறு வயது தாண்டாத பையன் ஒருவன் முக்
கோணமாக வெட்டிய சாண்ட்விச்சை விளிம்புகள் உதிராமல்
சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இன்னொருத்தன், கடுதாசி குவளையை
கையினால் பிடித்து லேசாக சுற்றியபடி தேநீரை உறிஞ்சினான். முகத்தில்
இருந்து எதிர்ப் பக்கத்துக்கு வளைந்த கூந்தல் உள்ள பெண்மணி கேசம்
வழியாகப் பார்த்தபடி அவசரமாக நோட் புத்தகத்தில் ஏதோ எழுதிக்
கொண்டிருந்தாள். எங்கள் ஆசான் உரையாற்றினார். மனிதனால்
படைக்கப்பட்ட எல்லாப் பிரச்சனைகளும் மனிதனால் சமாளிக்கக்
கூடியவையே. அதற்கு அவனிடம் தகுந்த ஆயுதம் இருக்க வேண்டும்.
இதுவே அவர் கூறிய உச்ச மந்திரத்தின் பொருள்.


பயிற்சி வகுப்பைத் தொடக்கினார். ஒரு தவ்வல் பிள்ளையும்
செய்யக்கூடியது. ஒரு வட்டமான பலகைத்துண்டு. நாலு கால்கள். இந்தக்
கால்களை அந்தப் பலகையில் சரியான இடத்தில் பொருத்தி, சரியாக
ஆணி அடிக்க வேண்டும். அப்பொழுது ஒரு சரியான Šடூல் உண்டாகும்.
ஓர் ஆணியை எடுத்து பலகையில் அடிப்பது மிகச் சாதாரண
வி„யம் என்று உங்களில் பலர் நினைக்கக்கூடும். அது அப்படியல்ல.
ஆணி அடிப்பதில் பதினாறு வழிவகைகள் இருக்கின்றன.

140 விதமான ஆணிகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. சுத்தியல்
கள் எத்தனை விதம் என்று நினைக்கிறீர்கள்? தவறு. அதுவும் தவறு. 64
விதமான சுத்தியல்கள் உள்ளன. (ஓர் ஒற்றுமையை கவனியுங்கள். ஆய
கலைகள் 64 என்று விளம்புகிறது எங்கள் பழம் தமிழ் இலக்கியம்.) இந்த
சுத்தியல்களை பிடிப்பதற்கு 217 விதமான பெருவிரல்கள் உலகத்தில்
நடமாடுவதாக சொல்கிறார்கள். அவற்றை அடிக்கும்போது பெரு
விரல்கள் நசுங்குவதில் எத்தனை வகைகள் இருக்கின்றன? அது இன்னும்
கணிக்கப்படவில்லை.
ஐயா, என்ன செய்யிறியள்?
ஆணி அடிக்கிறேன்.
அது என்ன?
பெருவிரல்.
இல்லை, கையில் என்ன வைத்திருக்கிறியள்?
ஆணி
மற்றக் கையில்?
சுத்தியல்.
ஐயா, அது சுத்தியல் இல்லை. போய் ஒரு அசல் சுத்தியல் கொண்டு

வாங்கோ!
நான் போனேன். நாலு வயது பிள்ளைகூட இனம் கண்டு
பிடிக்கக்கூடிய ஆயுதத்தை தேடி . அந்தப்பக்கம் வாசல் இருந்தது. கதவும்
இருந்தது. அதைத் தள்ளினேன். திறக்கவில்லை. ஏனென்றால் அது
இழுக்கவேண்டிய கதவு. இழுத்தேன். திறந்து வழிவிட்டது. அப்படியே
வெளியே வந்தேன். அங்கே எனக்காக காத்துக்கொண்டு வானம்
இருந்தது. காற்று குளிர்ந்துபோய் இருந்தது. பிறகு அந்தப் பக்கம் நான்
போகவே இல்லை.


பெருவிரல் காயம் ஆறிய பிறகு ஒரு நாள் கோடைக்கால முடிவில்
நான் இன்னும் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு
பட்டியல் தயாரித்தேன். இந்தப் பட்டியலின் இரண்டாவது பக்கத்தை
எழுதிக்கொண்டிருந்தபோது மூன்றாவது வீட்டில் ஏதோ அரவம் கேட்டு
மனைவி சைகை செய்தாள்.

எட்டிப்பார்த்தேன்.
மகனுடைய மீன்வால் மரண ஊர்வலக் கார்
வெளியே நின்றது. அந்த நீண்ட வாகனத்தில் முன்னுக்கும் பின்னுக்
குமாக மிச்சமிருக்கும் சாமான்களை அந்த கிழத் தம்பதியினர் ஏற்றினார்
கள். சிறிது நேரத்தில் வண்டி புறப்பட்டது. அவர்களை நினைத்து எனக்கு
சந்தோசமாக இருந்தது. அதே சமயம் வீட்டுக்காக இரவும் பகலும்
உழைத்த அந்த மூத்தவர்களை இனிமேல் காணமாட்டேன் என்றபோது
வருத்தமாகவும் இருந்தது. கைகளை அசைத்தேன். சவ ஊர்தியின்
பின்னால் இருந்து இரண்டு உயிருள்ள மனிதக் கைகள் தெருத் திருப்பம்
வரும் வரைக்கும் ஆடிக்கொண்டே இருந்தன.

அவர்கள் எனக்கு கைகாட்டினார்கள் என்று நான் நினைத்தேன்.
அவர்கள் தங்கள் பழைய வீட்டுக்கு காட்டினார்கள் என்று மனைவி
சொன்னாள்.
என்னுடைய பட்டியல் முடிவு பெறாமல் பல நாட்கள் அந்த
மேசையிலேயே இருந்தது.

from : அ.முத்துலிங்கம் படைப்புகள்